கிங் ஆப் கோதா படப்பிடிப்பு நிறைவு
நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமா தாண்டி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் கிங் ஆப் கோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜஸ்வர்யா லஷ்மி, ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு சான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பீஜாய் இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 150 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. விரைவில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் முடிவடைந்து வருகின்ற ஓனம் பண்டிகைக்கு மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.