கொலாலம்பூர்,
பாகிஸ்தான் கடும் அரசியல், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் விமான நிறுவமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் குத்தகை முறையில் மலேசியாவிடமிருந்து போயிங் 777 வாங்கியுள்ளது.
இதற்கு தவணை முறையில் பணம் மலேசியாவுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக தவணை தொகை செலுத்தப்படமால் இருந்து வந்தது. மொத்தம் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பாக்கி தொகை செலுத்தப்படாமல் இருந்தது.
இது தொடர்பாக மலேசிய கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் விமானத்தை பறிமுதல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து மலேசியா வந்த பாகிஸ்தான் விமானம் விமான நிலையத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
Related Tags :