சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 30-ம் தேதி ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி முதல் 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 83 டிகிரிஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கும்.
29-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சிவகங்கை, ஈரோடு மாவட்டம் எலந்தகுட்டைமேட்டில் தலா 4 செமீ, மதுரை மாவட்டம் குப்பணம்பட்டி, பேரையூர், தருமபுரி மாவட்டம் அரூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னார் அணை, சேலம் மாவட்டம் கரியகோயில் அணை, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஆகியவற்றில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.