சென்னை : திருப்பதி கோவிலில் ஏழுமலையான் கோவில் நடிகை வனிதா விஜயகுமார் சாமி தரிசனம் செய்தார்.
வனிதா விஜயகுமார் சந்திரலேகா, நான் ராஜாவாக போகிறேன், மாணிக்கம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.
வனிதா விஜயகுமார் : திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகிய வனிதா விஜயகுமார், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம், மீண்டும் பிரபலமானார். அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், யூடியூப் சேனல் மற்றும் சொந்தமாக துணி கடை, அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையையும் நடத்தி பிஸ்னாஸ் உமனாகவும் வலம் வருகிறார்.
திருப்பதியில் வனிதா : இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சாமி கு பின், அவர் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்றுக்கொண்ட பிரகாரத்தை சுற்றி வரும் போது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
25 ஆண்டுகளுக்கு பிறகு : அப்போது செய்தியாளர்களிடம் பேசி வனிதா விஜயகுமார், 25 ஆண்டுகளுக்கு தெலுங்கில் நான் நடித்திருக்கும் மல்லி பெல்லி என்ற திரைப்படம் வெளியாகி எனக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. தெலுங்கில் முதல் முதலாக நடித்த தேவி படத்தின் சுசிலா கேக்டரை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை என்பதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது
அப்போ எனக்கு 15 வயசு : நான் சினிமாவில் நடிக்க வரும் போது எனக்கு வயது 15, எனவே திரைத்துறையை பற்றி அவ்வளவாக எனக்கு தெரியவில்லை. இப்போது சினிமா பற்றி நன்கு புரிந்து கொண்டிருக்கிறேன். நடிப்பு தொழிலுக்கு வரும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. திரைத்துறையில் என்னுடைய இரண்டாவது இன்னிங்சிற்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.