திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கும் நேரம் அதிகரித்திருப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
திருப்பதி வெங்கடேச பெருமாள்ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கலியுக கடவுள் என அழைக்கப்படும் திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
கோப்பையை தட்டி தூக்கிய சிஎஸ்கே… முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கர் பாருங்க!குவியும் பக்தர்கள்கோடை விடுமுறை முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கடந்த 2 வாரங்களாக பக்தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது. ஆண்கள் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ‘அவரை அழைத்தால் கங்கை நீரால் கழுவணும்.. ஆர்எஸ்எஸ் மனநிலை அதுதான்’… சபாநாயகர் அப்பாவு பொளேர்!
டிபிசி காட்டேஜ் வரைநேரடி இலவச தரிசனத்தில் நேற்று வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். திருமலையில் உள்ள டிபிசி காட்டேஜ் வரை பக்தர்கள் வரிசையில் நின்றனர். நேர ஒதுக்கீடு இலவச தரிசன டோக்கன் உள்ள பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
‘அமைச்சர் பதவிக்கே அவமானம் நீங்கள்’… மனோ தங்கராஜை விளாசிவிட்ட குஷ்பு!வெளியான காரணம்
நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் 300 ரூபாய் ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே பக்தர்களின் தரிசனம் செய்வதற்கான நேரம் அதிகரித்துள்ளதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
பக்தர்கள் சோதனைஅதவாது தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் தரிசன நேரம் அதிகரித்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தரிசனத்திற்காக வரிசையில் நிற்கும் பக்தர்கள் பொறுமை காக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வேற லெவல்… அரக்கோணம் முதல் ஜோலார்பேட்டை வரை வந்தே மெட்ரோ ரயில்.. அசத்தல் தகவல்!காத்திருக்கும் பக்தர்களுக்கு
கியூ வளாகத்தில் காத்திருக்கும் பக்தர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு வேளைகளில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே 29 ஆம் தேதி திங்கள்கிழமையான நேற்று நள்ளிரவு வரை 78,126 பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனம் செய்தனர். 37,597 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். திங்கள்கிழமை 3 கோடியே 74 லட்சம் ரூபாய் உண்டி காணிக்கையாக வந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.