திருப்பூர்: திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில் திருதிருவென அந்த ஜோடி விழித்து நின்றுள்ளது.. இவர்களை ரோந்து போலீசார் கவனித்துவிட்டனர்.. அதற்கு பிறகு என்ன நடந்தது?
சிறுவர், சிறுமிகள் சிலர், ஆன்லைனிலையே பொழுதை கழிப்பது அதிகமாகிவிட்டது.. குறிப்பாக இன்ஸ்டாகிராமையும் இவர்கள் நிறையவே பயன்படுத்த துவங்கி உள்ளனர்.
இன்ஸ்டாகிராம்: பொழுதுபோக்கிற்காகவும், திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் பலராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இருப்பது இன்ஸ்டாகிராம்… பலருக்கு வருமானத்தை தரும் களமாகவும் இன்ஸ்டாகிராம் திகழ்ந்து வருகிறது.
போட்டோக்கள், வீடியோ ரீல்ஸ் என இன்ஸ்டாவில், இளைய தலைமுறையினரின் பொழுதுபோக்கு களமாகவும் இது உள்ளது.. இதன் ரீல்ஸ் வசதியை பயன்படுத்தி பலரும் பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவது, , நடிப்பு திறமையை வெளிப்படுத்துவது என அசத்தி வருகிறார்கள்.. அதேசமயம், இன்ஸ்டாவில் கணக்கு துவங்குவதற்கு, கட்டுப்பாடுகள் அவ்வளவாக இல்லை.. அதனால்தான், ஸ்கூல் படிக்கும் பிள்ளைகள்கூட, பல வகையான கணக்குகளை இதில் வைத்துள்ளனர். இதனால் சிலர் வாழ்வே சிதைந்து போகும் நிலையும் ஏற்படுகிறது.
பிஞ்சு காதல்: இப்படித்தான் இன்ஸ்டாகிராம் மூலம், சிறுவனும், சிறுமியும் அறிமுகமாகி உள்ளனர்.. 2 பேருமே இன்ஸ்டாவிலேயே காதலித்துள்ளனர்.. ஒருகட்டத்தில் ஊரைவிட்டு ஓடிப்போவது என்றும் முடிவு செய்துள்ளனர்.. இதற்காக சிறுவனும், சிறுமியும் திருப்பூர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருக்கிறார்கள்.. பஸ் ஸ்டாண்டில் இறங்கியதுமே, என்ன செய்வது? எங்கே போவது என்று தெரியாமல், 2 பேருமே திருதிருவென விழித்து நின்றிருக்கிறார்கள்.
அந்த நேரம் பார்த்து, பஸ் ஸ்டாண்டு பகுதியில் ரோந்து போன போலீசார், இவர்கள் 2 பேரையும் பார்த்துள்ளனர்.. இருவருமே மலங்க மலங்க விழிப்பதை பார்த்து, அருகில் சென்று விசாரித்தபோதுதான், விஷயம் தெரிந்தது.. அந்த சிறுவனுக்கு 15 வயதாகிறது.. சிறுமிக்கு 14 வயதாகிறது.. அந்த சிறுவன் புதுக்கோட்டையை சேர்ந்தவனாம்.. சிறுமி கடலூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது..
கல்யாணம்: இன்ஸ்டாவில் சாதாரணமாக பழகி உள்ளனர்.. பிறகு 2 பேருமே செல்போன் நம்பரை பரிமாறி கொண்டு பேச ஆரம்பித்தனர்.. இப்படியே காதல் வளர்ந்துள்ளது.. ஒருவருடமாக காதலித்து வந்திருக்கிறார்கள்.. பிறகு கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார்.. அவரவர் வீட்டில் தெரிந்தால், தொலைத்து விடுவார்கள் என்று 2 பேருக்குமே தெரிந்துள்ளது.. அதனால், வீட்டை விட்டு ஓடிவிடலாம் என்று முடிவு செய்து, திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருக்கிறார்கள். இதற்கு பிறகு, அவர்களுக்கு எதுவும் யோசிக்க தெரியவில்லை..
பஸ் ஸ்டாண்டிலிருந்து எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்தபோதுதான், ரோந்து போலீசில் சிக்கி உள்ளனர்.. அவர்களை மீட்ட போலீசார், 2 பேரையும் திருப்பூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.. பிறகு 2 வீட்டின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.. அந்த பெற்றோர்களும் பதறியடித்துக் கொண்டு, திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிவந்தனர்.. அப்போது, பிள்ளைகளையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.. 2 பேரையும் பார்த்து இரண்டு வீட்டினருமே கதறி அழுதனர்.. இறுதியில் பிள்ளைகளுக்கு போலீசார் அட்வைஸ் தந்து, பெற்றோருடன் அவர்களை அனுப்பி வைத்தனர்..
காலக்கொடுமை: நம்ம கண்ணுக்குதான் இவர்கள் எல்லாம், எப்பவும் குழந்தைகளாகவே தெரிகிறார்கள்.. ஆனால், சோஷியல்மீடியா உலகமோ, வேறு மாதிரியாக அவர்களை திசை மாற்றி கொண்டிருக்கிறது.. பெற்றோர்கள்தான் சுதாரிக்கணும்..!!