மும்பை : போஜ்புரி நடிகை ஆகான்ஷா துபே தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக உள்ளாடையில் முக்கிய ஆதாரம் சிக்கி உள்ளது.
மேரி ஜங் மேரா ஃபைஸ்லா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ஆகான்ஷா துபே, முஜ்சே ஷாதி கரோகி, வீரோன் கே வீர், ஃபைட்டர் கிங், கசம் பைடா கர்னே KI 2 என பல படங்களில் நடித்துள்ளார்.
படப்பிடிப்புக்காக வாரணாசிக்கு சென்ற ஆகான்ஷா துபே, ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆகான்ஷா துபே : 25 வயதே ஆன ஆகான்ஷா துபே தற்கொலை குறித்து வாரணாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, ஆகான்ஷா துபேவின் மேக்கப் மேனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், அறையின் கதவை பல முறை தட்டியும் திறக்காததால் எனக்கு சந்தேகம் எழுந்ததை அடுத்து, நான் ஹோட்டல் ஊழியர்களை அழைத்தேன். அவர்கள் வேறு சாவியை வைத்து கதவை திறந்தனர். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார் என வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
தாய் குற்றச்சாட்டு : ஆனால், நடிகை ஆகான்ஷா துபேயின் தாயார், தனது மகளின் தற்கொலைக்கு காரணம் பாடகர் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் சிங் தான் என குற்றம்சாட்டியிருந்தார். கடந்த 3 ஆண்டுகளாக அவர்களுக்காக பல படங்களில் என் மகள் நடித்து இருக்கிறார். இதில் எதற்குமே அவர்கள் பணம் தரவில்லை.
அழுதார்: நடித்தற்கான பணத்தை தருமாறு என் மகள் அவர்களிடம் கேட்டுள்ளார் என்றும், மார்ச் 21ந் தேதிசமர் சிங்கின் சகோதரர் சஞ்சய் சிங், கொன்றுவிடுவேன் என மிரட்டியதாக தொலைபேசி மூலம் என்னிடம் கூறி அழுதார். நான் தைரியமாக இரு என்று கூறியிருந்தேன் இதற்குள் இப்படி நடந்துவிட்டது என்றும் என் கூறியிருந்தார்.
உள்ளாடையில் ஆதாரம் : நடிகையின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சமர் சிங் மற்றும் சகோதரர் சஞ்சய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், நடிகையின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஆகான்ஷா துபேவின் உள்ளாடையில் விந்தணுக்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும். அவை இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சமர் சிங், சஞ்சய் சிங், சந்தீப் சிங் மற்றும் அருண் பாண்டே ஆகியோரது உயிரணுக்களுடன் ஒத்துப்போகிறதா என்பதை கண்டறிய சோதனை நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.