நாயகன் படம் போன்று இருக்கும் : கமல்
ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கும் தனது 234வது படத்தில் நடிக்கப் போகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதால் தற்போது ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அபுதாபியில் கமலஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஏ.ஆர்.ரஹ்மான் அவருக்கு வழங்கினார். இந்த விழாவை தொடர்ந்து மீடியாக்களை சந்தித்த கமலஹாசன், நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னத்துடன் இணைவதால் அந்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இது எங்களை பதட்டமடைய செய்தாலும், நாங்கள் கூலாக இந்த படத்தின் பணிகளை செய்து வருகிறோம். அதோடு, எனது 234வது படம் நாயகன் படத்தைப் போன்றுதான் இருக்கும் என்று கமல்ஹாசன் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதனால் இந்த படம் நாயகன் படத்தை போலவே கேங்ஸ்டர் கதையில் உருவாகும் என தெரிகிறது.