படையினரால் பொலன்னறுவையில் டெங்கு நோய்க்கு எதிரான வேலைத்திட்டம் இராணுவத் தலைமையகத்தின் நடவடிக்கைகள் பணிப்பகம் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, கிழக்கில் டெங்கு தடுப்பு திட்டம் புனானி 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்கே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், 234 வது காலாட் பிரிகேடின் படையினரால் (24) முன்னெடுக்கப்பட்டது.
7 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 12 கெமுனு ஹேவா’ படையணியின் படையினர் பொலன்னறுவை சுகாதார வைத்திய அலுவலகத்தின் அதிகாரியின் உதவியுடன் பொலன்னறுவை மற்றும் அதன் ஏனைய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை முன்னெடுத்தனர்.
234 வது காலாட் பிரிகேட்டைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட படையினர், சுகாதார வைத்திய அலுவலகத்தின் அதிகாரி, பொலன்னறுவை சுகாதார பரிசோதகர்கள், பொலன்னறுவை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் சமூக உறுப்பினர்களுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்தனர்.