கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக ஜூன் 7ம் தேதி அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெயிலில் தாக்கம் அதிகரித்து வரும் வழியில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் வரும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் வரும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.