கோட்டயம்: மனைவிகளை மாற்றுவதாக மனைவி ஒருவர் அளித்த புகாரில் அவரை கொன்று தானும் தற்கொலை செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவர் இன்று மரணமடைந்தார்.
கேரளாவில் மனைவிகளை மாற்றிக் கொள்ளும் விவகாரம் விஸ்வரூம் எடுத்து வருகிறது. பார்ட்டி என்ற பெயரில் அங்கு மனைவிகளை அழைத்து செல்லும் கணவன்மார்கள் கார் சாவிகளை குலுக்கி போட்டு யாருக்கு எந்த கார் சாவி வருகிறதோ அந்த கார் உரிமையாளரின் மனைவியுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளலாம்.
அது போல் வாட்ஸ் ஆப் குரூப் தொடங்கி அதன் மூலமும் மனைவிகளின் புகைப்படங்கள் போடப்பட்டு யாருக்கு பிடித்திருக்கிறதோ அவர்களுடன் மனைவிகளை அனுப்பும் மோசமான வழக்கத்தையும் கணவன்மார்கள் பின்பற்றுகிறார்கள்.
இப்படித்தான் கேரளாவில் இந்த விவகாரம் தலைதூக்கி இரு உயிர்களை கொன்றுள்ளது. கோட்டயத்தில் மனார்காடை சேர்ந்தவர் ஷினோ மாத்யூ. இவருடயை மனைவி ஜூபி ஜேக்கப் (28). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் ஒரு டெலிகிராம் குரூப் உள்ளது. அந்த குரூப்பில் மனைவிகளை மாற்றிக் கொள்ள விரும்புவோர் மாற்றிக் கொள்ளலாம்.
புதிய நபருடன் இன்னொருவரின் மனைவி படுக்கையை பகிர்ந்து கொள்வார். பிறகு அவர் தனது கணவரிடமே சென்றுவிடுவார். அந்த வகையில் ஷினோவின் மனைவியை வேறு ஒருவர் தன்னுடன் அனுப்புமாறு கேட்ட நிலையில் அவரும் தனது மனைவி ஜூபியை வேறு ஒருவருடன் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினார். இதற்கு அவர் ஒப்புக் கொள்ள முடியாது என கூறிய போது குழந்தைகளை கொன்று விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் வேறு வழியின்றி ஜூபியும் ஒப்புக் கொண்ட நிலையில் அவரை 9 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள ஷினோ அனுப்பியதாக தெரிகிறது. நாளுக்கு நாள் இந்த விவகாரத்தால் மனமுடைந்த ஜூபி ஒரு கட்டத்தில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கிருந்த படியே இந்த மனைவிகளை மாற்றும் விவகாரம் குறித்து போலீஸில் ஜூபி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீஸார் ஷினோவை கைது செய்தனர். எனினும் 1000 உறுப்பினர்கள் கொண்ட அந்த மனைவி மாற்றும் கும்பலை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஷினோ தனது மனைவி அவருடைய தந்தை வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அங்கு சென்று கழுத்தில் கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டார்.
இதையடுத்து தனது தாய் நீச்சல் குளத்தில் ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டறிந்த குழந்தைகள் தாத்தா, பாட்டியிடம் கூறச் சென்றனர். அப்போது ஷினோ தன்னிடம் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் சங்கனேச்சரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷினோவின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அவர் இன்று காலை உயிரிழந்துவிட்டார். ஷினோ அந்த விஷத்தை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அற்ப சுகத்திற்காக இரு உயிர்கள் பலியாகி இன்று அவர்களின் குழந்தைகள் ஆதரவற்று நிற்கும் காட்சி காண்போரை கலங்கச் செய்கிறது.