Acer Aspire 5 லேப்டாப் இந்தியாவில் புதிய இன்டெல் சிப் உடன் வெளியீடு!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவில் லேப்டாப் விற்பனை செய்துவரும் Acer நிறுவனம் அதன் புதிய ஜெனெரஷன் Acer Aspire 5 (2023) மாடல் லேப்டாப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த லேப்டாப்
13th Gen Intel i5 மற்றும் i7
ஆகிய இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் கடந்த ஆண்டு மாடலை விட இப்போது பல விதங்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றிய சில முக்கியமான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Acer Aspire 5 (2023) Specsஇதில் ஒரு 14 இன்ச் முழு HD (1900 x 1200) Pixels WUXGA டிஸ்பிளே உள்ளது. மேலும் 60HZ Refresh rate, 16:10 Aspect ratio, 170 டிகிரி வியூ வசதி, LED backlit வசதியுள்ள TFT LCD கீபோர்டு இடம்பெற்றுள்ளது.திறன் வசதிதிறன் வசதிக்காக இப்போது 13வது ஜெனரேஷன் இன்டெல் ஐ5 அல்லது ஐ7 சிப் இடம்பெறுகிறது. மேலும் NVIDIA GeForce RTX 2050 GPU வசதி, 8GB டூயல் சேனல் LPDDR4 SDRAM வசதி, 512GB NVMe ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இதை நாம் மேலும் இரண்டு soDIMM Module மூலமாக 32GB RAM வரை நீட்டித்துக்கொள்ளலாம்.மற்ற வசதிகள்இதில் Windows 11 OS, Multi Touch Gesture சப்போர்ட், WiFi 6E, ப்ளூடூத் 5.2, MU-MIMO டெக்னாலஜி, Gigabit Ethernet கனெக்டிவிட்டி உள்ளது. பேட்டரி வசதியாக இதில் 50WH பேட்டரி, 65W சார்ஜிங் வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதி, HDMI, 3 USB 3.2 Gen 1 Type A போர்ட் வசதி, 1 USB 3.2 Gen 2 Type C thunderbolt 4 போர்ட், USB Type C போர்ட் வசதி இடம்பெற்றுள்ளது.​விலை விவரம் (Acer Aspire 5 Price)இதன் 13th Gen Intel Core i5 1335U Processor சிப் 70,990 ஆயிரம் ரூபாய் விலையிலும், இதன் 13th Gen Intel Core i7 1355U Processor சிப் மாடல் 94,999 ஆயிரம் ரூபாய் விலையிலும் கிடைக்கிறது. இந்த லேப்டாப் Grey Metal Body கலரில் கிடைக்கும்.சிறப்பு சலுகைகள்இதை நாம் Acer ஸ்டோர், Croma, Vijay Sales, Amazon ஆகிய தளங்களில் வாங்கமுடியும். இப்போது இந்த ஐ5 மற்றும் ஐ7 வேரியண்ட் சிறப்பு சலுகை விலையாக 78,788 ஆயிரம் ரூபாய் விலையிலும், 89,885 ஆயிரம் ரூபாய் விலையிலும் கிடைக்கிறது.
​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.