சென்னை : நடிகர் ஆர்யா, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் சார்பட்டா பரம்பரை.
இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். படம் 1975ம் ஆண்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
அந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களத்தை கொடுத்திருந்தார் பா ரஞ்சித்.
சார்பட்டா 2 குறித்து அப்டேட் கொடுத்த ஆர்யா :
நடிகர்கள் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்டவர்களை லீட் கேரக்டர்களில் வைத்து கடந்த 2021ம் ஆண்டில் வெளியான படம் சார்ப்பட்டா பரம்பரை. கடந்த 1975ம் ஆண்டுகளில் வட சென்னை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளை மையமாக கொண்டு நடைபெற்ற குத்துச் சண்டையை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதையை உருவாக்கியிருந்தார் பா ரஞ்சித். சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரை என இருவேறு குழுக்களுக்கிடையில் நடைபெறும் போட்டி மற்றும் அதனால் ஏற்படும் சிக்கல்களை இந்தப் படம் பேசியது.
பீரியட் படமாக வெளியான இந்தப் படத்தில் அந்தக் காலகட்டத்தை சேர்ந்த பல்வேறு விஷயங்களை சிறப்பாக பயன்படுத்தியிருந்தார் பா ரஞ்சித். இந்தப் படத்தில் தான் நினைத்தபடி அனைத்து அம்சங்களையும் சிறப்பாக பயன்படுத்தியிருந்தார் பா ரஞ்சித். இந்தப் படத்தில் தன்னுடைய உடலை சிறப்பாக ஏற்றி, அந்தக் கேரக்டருக்கு சிறப்பாக நியாயம் செய்திருந்தார் ஆர்யா. அவரது உடல்மொழி, நடிப்பு உள்ளிட்டவை சிறப்பாக அமைந்திருந்தன.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தை இயக்கி வருகிறார் பா ரஞ்சித். இந்தப் படமும் பீரியட் படமாகவே உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விக்ரமின் கெட்டப் மிகவும் மிரட்டலாக அமைந்துள்ளன. படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்தக் கெட்டப்புடனேயே, பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரமோஷன்களிலும் விக்ரம் பங்கேற்றார்.
இதனிடையே, இந்தப் படத்தின் சூட்டிங்கின் இடையில் சார்பட்டா 2 படத்தின் அறிவிப்பை பா ரஞ்சித் மேற்கொண்டார். இந்தப் படத்தின் சூட்டிங், தங்கலான் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தவுடன் துவங்கும் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தன்னுடைய காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் பிரமோஷனில் பேசிய ஆர்யா, சார்ப்பட்டா 2 படத்தின் அப்டேட்டை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், விரைவில் சார்ப்பட்டா 2 படத்தின் ஸ்கிரிப்ட் தயாராகி விடும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் ஆர்யா தெரிவித்துள்ளார். அவரது காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படம் வரும் ஜூன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு சித்தி இத்னானி ஜோடியாகியுள்ளார். விருமன் படத்தை தொடர்ந்து இயக்குநர் முத்தையா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.