Dhanush: நீளமான தலைமுடி, ஓவர் தாடி, டக்குனு பார்த்தா யாருனே தெரியல: வைரலாகும் தனுஷ் போட்டோ

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
நடிப்பு ராட்சசனான தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். பெரிதும் எதிர்பார்க்கப்படும் கேப்டன் மில்லரில் தனுஷ் ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேடையில் Happy News சொன்ன விஜய் ஆண்டனி!
கேப்டன் மில்லர் படத்திற்காக முடியை நீளமாக வளர்த்து, தாடி வைத்தார் தனுஷ். இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் நடந்து வந்த தனுஷை பார்த்தவர்கள் அது வேறு யாரோ என முதலில் நினைத்துவிட்டார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

முடி மேலும் நீளமாக வளர்ந்துவிட்டது, தாடி பயங்கரமாக இருக்கிறது. தனுஷ் ஏற்கனவே ஒல்லியாகத் தான் இருப்பார். இந்நிலையில் தற்போது மேலும் மெலிந்து காணப்படுகிறார். தனுஷுக்கு என்னாச்சு, ஏன் இப்படி ஆகிவிட்டார் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

இந்நிலையில் தனுஷ் ஏன் திடீரென்று மும்பைக்கு செல்ல வேண்டும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கேப்டன் மில்லரை அடுத்து டி50 படத்தை இயக்கி, நடிக்கவிருக்கிறார் தனுஷ்.

ப. பாண்டி படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். ஆனால் அதன் பிறகு அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. இயக்குநர் தனுஷை எப்பொழுது பார்க்கலாம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்கள். இந்நிலையில் தான் டி50 படத்தை இயக்கவிருக்கிறார்.

ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறதாம் டி50. எஸ்.ஜே. சூர்யாவும், சந்தீப் கிஷனும் தனுஷின் சகோதரர்களாக நடிக்கவிருக்கிறார்கள். இந்நிலையில் தனுஷ் மும்பை சென்றதால் டி50 படத்தில் பாலிவுட் நடிகர் யாராவது நடிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

பாலிவுட் நடிகரை தன் படத்தில் நடிக்க வைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தான் தனுஷ் மும்பை சென்றிருப்பாரோ என பேச்சு கிளம்பியிருக்கிறது. இதற்கிடையே பாலிவுட் படத்தில் மீண்டும் நடிக்கப் போகிறார் போன்று எனவும் ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

Dhanush:செம குஷியில் விக்னேஷ் சிவன், தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், உதய்ணா: காரணம் தல

ஹாலிவுட் வரை சென்ற தனுஷ், ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு அமிதாப் பச்சனுடன் சேர்ந்து ஷமிதாப் படத்தில் நடித்தார். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான பாலிவுட் படம் அத்ரங்கி ரே. சாரா அலி கானின் கணவராக நடித்திருந்தார் தனுஷ்.

இந்நிலையில் தான் அவர் மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்கிறாரோ என பேச்சு கிளம்பியிருக்கிறது.

கை நிறைய படங்கள் வைத்து நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார். வரலாற்று படமாக உருவாகும் அது தனக்கும், தனுஷுக்கும் முக்கியமான படமாக அமையும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் மாரி செல்வராஜ்.

டி50 படப்பிடிப்பை 4 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் தனுஷ். வட சென்னை பின்னணியில் உருவாகும் டி50 படம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது.

தனுஷ் தன் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸை மூடிவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் படம் ஒன்றை தயாரிக்கப் போகிறது. தன் காதல் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் சேர்ந்து அந்த தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.