சென்னை : நடிகர் பிரபாஸ் லீட் கேரக்டரில் நடிக்கும் ப்ராஜெக்ட் கே. பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
இந்திய அளவில் மிகவும் அதிகமான பொருட்செலவில் இந்தப் படம் உருவாகி வருகிறது. தெலுங்கின் முன்னணி நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தில் பிரபாசிற்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். நடிகர் அமிதாப் பச்சனும் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
பிராஜெக்ட் கே படத்தில் பிரபாசிற்கு வில்லனாகும் கமல் : நடிகர் பிரபாஸ் அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஸ்ருதிஹாசன் ஜோடியாகியுள்ளார். இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. அடுத்தடுத்த முன்னணி இயக்குநர்கள் இயக்கத்தில் பிரபாஸ் கமிட்டாகி நடித்து வருகிறார். பாகுபலி 1 மற்றும் 2ம் பாகம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், அவர் தெலுங்கின் முன்னணி நடிகராகியுள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிராஜெக்ட் கே என்ற படத்தில் தற்போது பிரபாஸ் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே இணைந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தில் நடிகர் அமிதாப் பச்சனும் திஷா பட்டானியும் முக்கியமான கேரக்டர்களில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. வைஜெயந்தி மூவிஸ் சார்பில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
வைஜெயந்தி மூவிஸ் தற்போது 50வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையடுத்து, பொன்விழா ஆண்டு படைப்பாக பிரம்மாண்டமான இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜனவரி 12ம் தேதி இந்தப் படம் சர்வதேச அளவில்வ ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சயின்ஸ் பிக்ஷனாக இந்தப் படம் மிரட்டலான திரைக்கதையும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட மேக்கிங் காட்சிகளின் வீடியோ கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்திய அளவில் இதுவரை இல்லாதவகையில் மிகவும் பிரம்மாண்டமாக பிராஜெக்ட் கே படம் உருவாகி வருகிறது. மேலும் உலகத் தரத்திலான படைப்பாக இந்தப் படத்தை நாக் அஸ்வின் உருவாக்கி வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் சுவாரஸ்யமான அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் நடிகர் பிரபாசிற்கு வில்லனாக உலகநாயகன் கமல்ஹாசன் இணையவுள்ளதாகவும் இதற்காக அவரிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்தப் படத்தில் நடிப்பதற்காக அவருக்கு மிகவும் அதிக அளவில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்காக வெறுமனே 20 நாட்கள் மட்டுமே கமல் கால்ஷீட் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். தொழில்நுட்ப ரீதியில் மிகவும் கவனத்துடன் இந்தப் படத்தை நாக் அஸ்வின் உருவாக்கிவரும் சூழலில், தெலுங்கு திரையுலகின் மிகவும் சிறப்பான படமாக இந்தப் படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் இதுவரை வெளியான சயின்ஸ் பிக்ஷன் படங்களுக்கு சவால் கொடுக்கும்வகையில் பிராஜெக்ட் கே அமையும் என்றும் கூறப்படுகிறது.