இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
KS Ravikumar news: கே.எஸ். ரவிக்குமார் படம் ரிலீஸானால் தியேட்டருக்கு ரசிகர்கள் படையெடுப்பார்கள். ஆனால் அவர் போக மாட்டார் என்று உங்களுக்கு தெரியுமா?
கே.எஸ். ரவிக்குமார்புரியாத புதிர் படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார். அவர் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படங்களில் தங்களுக்கு பிடித்த காட்சிகளின் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்கள். மேலும் ரவிக்குமார் நடித்த காட்சி வீடியோக்களும் வலம் வந்து கொண்டிருக்கிறது.பிச்சைக்காரன்மேடையில் Happy News சொன்ன விஜய் ஆண்டனி!நடிப்புதான் இயக்கும் படங்களில் ஒரு காட்சியிலாவது வந்துவிடுவார் கே.எஸ். ரவிக்குமார். அவர் வரும் காட்சி க்யூட்டாக இருக்கும் என்பது தான் சிறப்பு அம்சமே. படையப்பா படத்தில் ஒருபடி மேலே போய் ரஜினி அணிந்த அதே உடையில் டான்ஸ் ஆடியிருப்பார். அவர் ஒரு நல்ல இயக்குநர் மட்டும் அல்ல பயங்கரமான வில்லனும் கூட. ரவிக்குமார் வில்லனாக நடித்தால் அது நடிப்பு என்பதை மறந்து அவரை திட்ட ஆரம்பித்துவிடுவார்கள் ரசிகர்கள்.
Yashika: யாஷிகாவும், அஜித் மச்சானும் எங்கு, எப்படி சந்தித்து காதலித்தார்கள்?
நாட்டாமைரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக, பாட்டாளி, சமுத்திரம் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகின. அதில் நாட்டாமை படம் இன்றளவும் பிரபலம். சரத்குமாரின் கெரியரில் மறக்கவே முடியாத படமாக நாட்டாமை அமைந்தது என்றால் அது மிகையல்ல. நாட்டாமையை பிடிக்காத ஆள் உண்டா?
கமல் ஹாசன்Kamal Haasan:நான் அன்றே சொன்னேன், யாரும் என் பேச்சை கேட்கல: கமல் ஹாசன்உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம், மன்மதன் அம்பு ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்தார் ரவிக்குமார். எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும் தெனாலி, அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் படங்களை பார்த்தால் விழுந்து விழுந்து சிரிக்காமல் இருக்க முடியாது.
ரஜினிசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தான் இயக்கிய முத்து படத்தில் தலைவரை இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்திருப்பார் கே.எஸ். ரவிக்குமார். அந்த படையப்பா படத்தை எல்லாம் மறக்க முடியுமா?. தலைவரை வேற லெவலில் காட்டியிருந்தார். ரஜினிகாந்த், கமல் ஹாசனின் குட்புக்கில் இருப்பவர் ரவிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dhanush:செம குஷியில் விக்னேஷ் சிவன், தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், உதய்ணா: காரணம் தல
அஜித்கமல், ரஜினியை மட்டும் அல்ல தளபதி விஜய், அஜித் குமார், சூர்யா, சிம்பு ஆகியோரை வைத்தும் படங்கள் இயக்கியிருக்கிறார். அஜித், ரவிகுமார் கூட்டணி சேர்ந்த வில்லன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. வரலாறு படத்தில் அஜித்தின் கெட்டப்புகளை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.
தியேட்டர்கே.எஸ். ரவிக்குமார் படம் ரிலீஸானால் அதை நம்பி பார்க்கலாம் என்று ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வது உண்டு. ரவிக்குமார் எடுத்தால் அந்த படம் கண்டிப்பாக நல்லாத்தான்யா இருக்கும் என்று பெயர் எடுத்திருக்கிறார். அவர் படம் ரிலீஸானால் மக்கள் தியேட்டர்களுக்கு சந்தோஷமாக செல்வார்கள். ஆனால் தன் படத்தை பார்க்க ரவிக்குமார் தியேட்டருக்கு சென்றதே இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
சென்டிமென்ட்பேட்டி ஒன்றில் கே.எஸ். ரவிக்குமார் கூறியதாவது, நான் எடுத்த படங்களை இதுவரை தியேட்டரில் பார்த்ததே இல்லை. படையப்பாவை கூட பார்த்தது இல்லை. அது ஒரு சென்டிமென்ட் எனக்கு. என் உதவியாளர்கள் தியேட்டருக்கு சென்று ரசிகர்களின் ரியாக்ஷனை பதிவு செய்துவிட்டு வந்து எனக்கு போட்டுக் காட்டினார்கள் என்றார்கள்.