புனே: மணிப்பூரில் நிலைமை சீராக சிறிது காலமாகும் என முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: மணிப்பூரில் இரு இன குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதலால் வன்முறை ஏற்படுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னை போன்ற சூழ்நிலை உள்ளதால், மாநில அரசுக்கு உதவி வருகிறோம்.
நாங்கள் சிறப்பாக செயல்பட்டு, பலரின் உயிர்களை காப்பாற்றி உள்ளோம். ஆனாலும், அங்கு சவால்கள் முற்றிலும் நீங்கிவிடவில்லை. நிலைமை சீராக சில காலம் எடுக்கும். இந்தப் பிரச்னை விரைந்து தீர்க்கப்படும். மாநில அரசு சிஆர்பிஎப் உதவியுடன் இந்த வேலையை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement