சென்னை : இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களின்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தன்னை சர்வதேச தரத்திற்கு உயர்த்திக் கொண்டுள்ளார்.
அடுத்ததாக உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து த்ருவ் விக்ரம், தனுஷ் என அடுத்தடுத்த நடிகர்களின் படங்களை எடுக்க கமிட்டாகியுள்ளார் மாரி செல்வராஜ்.
தனுஷுடன் மாரி செல்வராஜ் இணையும் வரலாற்றுப்படம் : இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய முதல் படமான பரியேறும் படத்திலேயே ஏராளமான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இயக்குநர் ராமின் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ், சமூகத்தில் நிலவும் சிக்கல்களை ரசிகர்களை கவரும் வகையில் கொடுத்து வருகிறார். இரண்டாவதாக நடிகர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இந்தப் படம் தனுஷ் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது.
இந்நிலையில் அடுத்ததாக இவர் த்ருவ் விக்ரம் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். தற்போது இந்தப் படம் சூட்டிங் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் ஜூன் 1ம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. படத்தின் இசையை ஏஆர் ரஹ்மான் மேற்கொண்டுள்ளார்.
படத்தில் உதயநிதியுடன் வடிவேலு, பகத் பாசித், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில், ரசிகர்களிடையே இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக த்ருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டு வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் த்ருவ் விக்ரம். இந்தப் படத்தின் சூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவரும் தனுஷ், அடுத்ததாக தன்னுடைய இயக்கத்தில் டி50 படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் இந்தப் படம் உருவாகவுள்ளதாக மாரி செல்வராஜ் தற்போது தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். போர் குறித்த விஷயங்களை இந்தப் படம் பேசும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்னும் இந்தப் படத்தின் கதை முழுமையாக முடிவாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தனுஷ் மற்றும் தன்னுடைய கேரியரில் இந்தப் படம் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்றும் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இந்தப் படம் மிகவும் சிறப்பாக அமையும் என்று தனுஷ் எதிர்பார்க்கிறார் என்றும் அந்த எதிர்பார்ப்பை தான் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளதால் படத்தை துவங்க கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்தை தனுஷின் வொன்டர்பார் நிறுவனமே தயாரிக்கவுள்ளது தனக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் என்றும் அவர் கூறியுள்ளார். த்ருவ் படத்தை முடித்தவுடன் தனுஷின் படத்தை துவங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீடு அடுத்ததாக வரும் ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்த வேலைகளில் மாரி செல்வராஜ் மிகவும் பிசியாக காணப்படுகிறார். இந்தப் படத்தின் ரிலீசை தொடர்ந்தே த்ருவ் விக்ரம் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.