சென்னை: Nayanthara (நயன்தாரா) குடைக்குள் மழை படத்துக்கு நடிகை நயன்தாராவை வேண்டாம் என்று சொன்னதாக பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. திரையுலகில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கும் அவருக்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு ரஜினிக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தவர். சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் காதலில் விழுந்து பிறகு எழுந்து மீண்டும் சினிமாவுக்குள் வந்து கலக்கிக்கொண்டிருக்கிறார்.
நம்பர் 1 நடிகை:
ஆணாதிக்கம் கொண்டது சினிமா துறை என்று பலர் கூறுவதுண்டு. அப்படிப்பட்ட சினிமா துறையில் ஒரு நடிகராக இரண்டாவது இன்னிங்ஸில் கோலோச்சுவதே லேசுப்பட்ட காரியமில்லை. ஆனால் நயன் தாராவோ தனது இரண்டாவது இன்னிங்ஸில் கதைக்கும், கதாநாயகிக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து இப்போது நம்பர் 1 நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் சிவனுடன் திருமணம்:
நயனின் இரண்டாவது இன்னிங்ஸில் முக்கியமான படங்களில் நானும் ரௌடிதான் படமும் ஒன்று. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். வழக்கம்போல் நயனின் இந்தக் காதலையும் சில கொச்சையாகவே பேசினர். ஆனால் காதலுக்கு உண்மையாக இருந்த இரண்டு பேரும் கடந்த வரும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். திருமண நாளன்று தமிழ்நாடு முழுவதும் பலரும் உணவு கொடுத்தும் பாராட்டை பெற்றனர்.
நயனின் உலகங்கள்:
அவரது காதலை எப்படி பலரும் விவாத பொருள் ஆக்கினார்களோ அதேபோல் அவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதையும் விவாதமாக்கினார்கள். ஆனால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதில் நயனும், விக்க்யும் எந்த விதிமீறலையும் செய்யவில்லை என்பது உறுதியான பிறகு அனைவருமே அமைதி காத்தார்கள். அவர்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.
வேண்டாம் என்று சொன்ன பார்த்திபன்:
ஐயா படத்தின் மூலம் நயன்தாரா அறிமுகமாகியிருந்தாலும் அவர் அறிமுகமாகியிருக்க வேண்டிய படம் பார்த்திபன் இயக்கி நடித்த குடைக்குள் மழை. ஆனால் அந்த சமயத்தில் பார்த்திபன் நயன்தாராவை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். அதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், “நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு நான் இயக்கிய ‘குடைக்குள் மழை’ படத்தில் நடிக்க வைக்க அவரை ஒருநாள் காலை 8 மணிக்கு வர சொன்னேன்.
எனக்கு கோபம் வரும்:
ஆனால், அன்று அவர் வரவில்லை. எனக்கு ஃபோன் செய்து ‘சார் என்னால் நேற்று வர முடியவில்லை. இன்றுதான் பஸ் ஏறுகிறேன். நாளை காலை கண்டிப்பாக வந்துவிடுகிறேன்’ என சொன்னார். கோபத்தில் இருந்த நான் ‘இல்லை வர வேண்டாம்’ என சொல்லிவிட்டேன். எனக்கு அப்படித்தான் கோபம் வரும். இப்போது அவர் லேடி சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார்” என்றார். நயன்தாரா இப்போது ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்திலும், தமிழில் தனது 75ஆவது படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.