சென்னை : விஜய்ஆண்டனின் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மொத்த வசூல்குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர், தேவ் கில்,ஜான் விஜய்,ஹரீஷ் பேரடி, ராதா ரவி, யோகிபாபு, மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி நடித்தது மட்டுமில்லாமல், இப்படத்தை எழுதி, இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்பு செய்து தயாரிப்பு பணிகளையும் செய்து அசத்திவிட்டார்
விஜய்ஆண்டனி : இயக்குநர் சசி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியாகி பெரும் வசூலையும் அள்ளியது. நடிகர் விஜய் ஆண்டனியின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக பிச்சைக்காரன் படம் அமைந்தது. பிச்சைக்காரன் படம் தமிழ் மொழியில் படங்களில் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
பிச்சைக்காரன் 2 : பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இதையடுத்து, இரண்டாம் பாகத்தின் கதையை விஜய் ஆண்டனி எழுதி சசியை இயக்குமாறு கூறினார். ஆனால், சசி இதை மறுத்தத்தை அடுத்து விஜய் ஆண்டனியை இப்படத்தை இயக்கி இயக்குநராக மாறினார்.
வசூல் விவரம் : பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் மே 19ந் தேதி வெள்ளிக்கிழமை உலகமெங்கும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் படம் வெளியானது. முதல் நாளில் 3.25 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.4.5 கோடி வசூலித்து வேறலெவல் சாதானை படைத்துள்ளது.
பல கோடி லாபம் : இந்நிலையில்,பிச்சைக்காரன் 2 திரைப்படம் 11 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் திரைப்படம் உலக அளவில் 35 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.15 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், சுமார் 20 கோடியை வசூலித்து, லாபம் பார்த்துள்ளது. இதைத் தொடர்ந்து டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் போன்ற விற்பனையிலும் இவருக்கு லாபமே கிடைத்துள்ளது.