Pisasini – ரஜினிகாந்த் கடவுள் போன்றவர் – பிசாசினி நடிகர் மனம் திறந்த பேட்டி

மும்பை: Pisasini Harsh Rajput (பிசாசினி ஹர்ஷ் ராஜ்புட்) ரஜினிகாந்த் கடவுள் போன்றவர் அவரைவிட பெரிய ஆள் யாருமே இல்லை என பிசாசினி சீரியலில் நடிக்கும் ஹர்ஷ் ராஜ்புட் தெரிவித்திருக்கிறார்.

பிசாசினி சீரியல் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது. மிரினல் ஜா கதை மற்றும் திரைக்கதை எழுதியிருக்கும் இந்த சீரியலை சாகுந்தலம் டெலி பிலிம்ஸ் மற்றும் எம்.ஏ.ஜே புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. தமிழிலும் டப் செய்யப்பட்டு கலர்ஸ் தமிழில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலுக்கு தமிழ்நாட்டில் டீசண்ட்டான வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ஹர்ஷ் ராஜ்புட் பேட்டி:

இந்நிலையில் பிசாசினி சீரியலில் ரக்‌ஷித் சிங் ராஜ்புட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹர்ஷ் ராஜ்புட் தமிழ் பில்மிபீட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “பிசாசினி சீரியலுக்கு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அங்கிருந்து பலரும் எனக்கு மெசேஜையும் அனுப்பினார்கள். சமூக வலைதளங்களிலும் நல்லவிதமாகத்தான் பேசிக்கொள்கிறார்கள்.

19 வருட அனுபவம்:

நான் 19 வருடங்களாக நடித்துவருகிறேன். 16 வயதில் நடிக்க ஆரம்பித்தேன். நான் நன்றாக படிக்கக்கூடியவனாக இருந்தாலும் நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் குஜராத்திலிருந்து மும்பைக்கு வந்தேன். டிடி நேஷனலில் முதல்முறையாக நடிக்கும்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அதன் பிறகு பல டிவி நிகழ்ச்சிகளில் இருந்திருக்கிறேன். சில படங்களிலும் நான் நடித்திருக்கிறேன். பல ஏற்ற இறக்கங்களை நான் சந்தித்திருக்கிறேன். இது எனக்கு ரொம்பவே ஆர்வம் உள்ள பயணமாக இருக்கிறது.

Pisasini Actor Harsh Rajput exclusive Interview

கேரக்டர்தான் முக்கியம்:

நான் ஒரு கதையை பல காரணங்களுக்காக ஒத்துக்கொள்வேன். அதில் ரொம்பவே முக்கியமானது என்னுடைய கதாபாத்திரம்தான். அதேபோல் எனக்கு பிடித்தமான ஜானர் வந்தாலும் அதனையும் ஒத்துக்கொள்வேன். மேலும் ஆக்‌ஷன், எமோஷனல் உள்ளிட்ட விஷயங்களையும் நான் கவனிப்பேன். சிறந்தவர்களுடன் பணியாற்ற வேண்டும் என எப்போதுமே நான் நினைப்பேன். அதற்காக 200 சதவீதம் உழைப்பை கொடுப்பேன்.

தமிழில் பணியாற்ற பிடிக்கும்:

தமிழிலோ அல்லது தென்னிந்தியாவில் இருட்ந்தோ இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை. ஆனால் அங்கு பணியாற்றுவதற்கு எனக்கு எப்போதுமே விருப்பம்தான். சினிமா என்பது சினிமாதான். அதற்கு மொழி இல்லை. இங்கு பணியாற்றுவது,. அங்கு பணியாற்றுவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சிறந்தவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

ரஜினியைவிட பெரிது யாரும் இல்லை:

ரஜினிகாந்த்தை எனக்கு அவ்வளவு பிடிக்கும். அவரைவிட பெரிதானவர் இங்கு யார் இருக்கிறார். அவர் கடவுள் போன்றவர். அதேபோல் கமல் ஹாசன், ராம் சரண், ஜூனியர் என்.டிஆர் உள்ளிட்டோரையும் பிடிக்கும். நேரடி தமிழ் படத்தில் நடிப்பதற்கு எனக்கு எப்பவுமே விருப்பம்தான். மணிரத்னம், ராஜமௌலி,அட்லீ போன்றவர்களின் இயக்கத்தில் நடிக்க ரொம்பவே ஆசை” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.