சென்னை : நடிகை சாய் பல்லவியின் நீண்ட கூந்தலின் ரகசியத்தை கேட்டு அவரது ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.
பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் சாய் பல்லவி
தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடம் பிரபலமாக இருந்த சாய் பல்லவி தெலுங்கிலும் தனது கால் தடத்தை பதித்தார்.
ரவுடி பேபி : மாரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி 2 திரைப்படம் உருவானது. இதில், தனுஷ்,சாய் பல்லவி,ரோபோ சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் தனுஷூடன் இணைந்து ரவுடி பேபி பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் சூப்பரோ சூப்பர். அந்த பாடலுக்கு பிறகு ஏ ரவுடி பேபி என, அனைவரையும் கொஞ்சும் அளவுக்கு, தரமான ஆட்டத்தை போட்டிருந்தார். இன்று வரை இந்த பாடல் யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது.
அடுத்தடுத்த படங்களில் : தனது திறமையான நடிப்பால், அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வரும் சாய் பல்லவி, சமந்தாவின் கணவர் நாக சைத்தான்யாவுடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஷ்யாம் சிங்கா ராய்,விராத பர்வம் , கார்கி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில்,கார்கி படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு அனைவரும் பாராட்டும் வகையில் இருந்தது. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார்.
சரும பாதுகாப்பு : இந்நிலையில், நடிகை சாய்பல்லவி தனது நீண்ட கூந்தலின் ரகசியம் குறித்து கூறியுள்ளார். நான் இயற்கை மீது நம்பிக்கை கொண்டவள் எப்போதும் இயற்கையான உணவையே எடுக்க ஆசைப்படுவேன். இதனால், சருமத்தை பாதுகாக்க பழங்கள் மற்றும் பழச்சாறு போன்றவற்றை எடுத்துக்கொள்வேன் என்றார்.
கூந்தலின் ரகசியம் : தனக்கு செயற்கை அழகு பொருட்கள் மீது தனக்கு நம்பிக்கை என்பதால், என்னுடைய கூந்தலுக்கு கற்றாழையை பயன்படுத்துவேன். கூந்தலின் உற்ற நண்பன் கற்றாழை தான். தலைமுடியில் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தினால் பொடுகைத் தடுக்கும். இதனால் முடி வளர்ச்சி தூண்டும் என்று தனது நீண்ட கூந்தலின் ரகசியத்தை கூறியுள்ளார் நடிகை சாய் பல்லவி.