புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அதன் பயன்பாட்டினை குறைக்க வலியுறுத்தி மே 31ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை பயன்படுத்துவதால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சிகரெட் தயாரிப்பதற்காக 60 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன. புகை பிடிப்பதால் அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது.
புகைப்பது ஒரு தவறான பழக்கம், புகைப்பது பணத்தை வீணடிக்கிறது, உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கிறது. பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப்படுகிறது. இந்தியாவில் 12 கோடி பேர் புகைக்கின்றனர். புகையிலையால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.புகையிலை பயன்படுத்துவதால், நுரையீரல் கேன்சர், காசநோய், ஆஸ்துமா, மாரடைப்பு
உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. புகைப்பவருக்கு அருகில் நிற்பவருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. ‘உணவை அதிகரியுங்கள்; புகையிலையை அல்ல’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement