Thalaivar 171: தலைவர் 171 திரைப்படம்..உச்சகட்ட யோசனையில் ரஜினி..இதுதான் காரணமா ?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துவிட்டு லால் சலாம் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகின்றார். நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரஜினி லால் சலாம் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக மும்பைக்கு சென்றுள்ளார்.

அதனை முடித்துவிட்டு ஜெயிலர் டப்பிங் பணிகளை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை மாதம் மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற இறுகின்றதாம். படத்தின் மீது முழு திருப்தியில் இருக்கும் ரஜினி இப்படம் தான் எதிர்பார்த்த வெற்றியை தேடி தரும் என நம்பிக்கையில் இருக்கிறாராம்.

Thalapathy 68: தளபதி 68 கதைக்களம்..விட்டதை பிடிக்க நினைக்கும் தளபதி..!

இதே மகிழ்ச்சியில் ரஜினி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகின்றார். அந்த வகையில் தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் ரஜினி அடுத்ததாக ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்க இவர்கின்றார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

முற்றிலும் வித்யாசமான மாறுபட்ட ரோலில் ரஜினி இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதையடுத்து கமர்ஷியல் சினிமாவிற்கு அப்பாற்பட்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து ரஜினி லோகேஷின் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவுள்ளது. மேலும் அதுவே ரஜினியின் கடைசி படமாக இதுற்கும் என்றும், அப்படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் பேசப்பட்டு வருகின்றது.

இதையடுத்து தற்போது லியோ பட வேலைகளில் பிசியாக இருக்கும் லோகேஷ் இப்படத்தை முடித்துவிட்டு அடுத்தாண்டு துவக்கத்தில் ரஜினியை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தலைவர் 171 படத்திற்காக லோகேஷிற்கு பல கோடிகள் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்படம் ஒரு மல்டி ஸ்டாரர் படமாக உருவாக இருப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது.

இது ஒருபக்கம் இருக்க தலைவர் 171 திரைப்படத்தை யார் தயாரிப்பார் என்ற கேள்வியும் எழுந்து வருகின்றது. ரஜினிக்கு சன் பிக்சர்ஸ் நெருக்கம் என்பதால் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஒருபக்கம் தகவல்கள் வர மறுபக்கம் இப்படத்தை லலித் தயாரிக்கவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது.

தயாரிப்பாளர் லலித் லோகேஷிற்கு மியாகவும் நெருக்கமானவர் என்பதால் அவரே இப்படத்தை தயாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதையெல்லாம் தாண்டி தலைவர் 171 படத்தை ராஜ்
கமல்
பிலிம்ஸ் சார்பாக கமலே தயாரிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளது.

ஏற்கனவே லோகேஷின் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்ததும், அப்படத்தை கமலே தயாரிக்க இருந்ததும் நாம் அனைவர்க்கும் தெரியும். எனவே தலைவர் 171 படத்தை கமலும் தயாரிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் ரஜினி தற்போது யாருடைய தயாரிப்பில் 171 படத்தில் நடிப்பது என பலத்த யோசனையில் இருக்கிறாராம். எனவே விரைவில் ஒரு நல்ல முடிவை எடுத்து ரஜினி தன் 171 ஆவது படத்தின் வேலைகளை துவங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.