தமிழ்நாடு
ஐபிஎல் 2013 சாம்பியன் பட்டம் வென்ற தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடினமான சூழலை திறமையாக எதிர்கொண்டார் என ஜடேஜாவிற்கு புகழாரம் சூட்டினார்.ஜப்பானை சேர்ந்த 6 நிறுவனங்கள் உடன் தமிழக அரசு 819 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளது.உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எந்தவிதமான அசையா சொத்தும் கிடையாது என்று அறக்கட்டளை அறங்காவலர் பாபு தெரிவித்துள்ளார். சமீபத்தில் 36.3 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து முடக்கத்திற்கும் எங்கள் அறக்கட்டளைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.நரிக்குறவர் சமூகத்தினருக்கு எஸ்.டி சான்றிதழ் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றது. இந்த சூழலில் 14 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதில், சென்னை, ஈரோடு, கரூர், மதுரை, சேலம், திருப்பத்தூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கும்.அமைச்சர் சிவசங்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து, பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றனர்.சென்னை கிண்டியில் உள்ள 230 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5ஆம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார்.சென்னை விமான நிலைய இயக்குநராக சி.வி.தீபக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இயக்குநராக இருந்த சரத்குமார், கடந்த மாத இறுதியில் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்தியா
மணிப்பூர் மாநில கலவரத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் இம்பால் விரைந்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா.பிரதமர் மோடியின் 9 ஆண்டு ஆட்சி காலத்தில் முழு வீச்சில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம்
சென்னையில் 374வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விளையாட்டு
5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறும் அம்பத்தி ராயுடுவின் கைகளில் கோப்பையை பெறச் செய்தார் தோனி.அடுத்த ஐபிஎல் சீசனிலும் விளையாடுவேன் என தோனி சூசகமாக தெரிவித்துள்ளார். அதாவது, ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்றும், இருப்பினும் 6 அல்லது 7 மாதங்கள் கழித்தே முடிவு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.