Two sentenced to death in Saudi Arabia | சவுதியில் இருவருக்கு மரண தண்டனை

துபாய், சவுதி அரேபியாவில் பயங்ரவாத செயல்களில் ஈடுபட்ட இருவருக்கு, வாளால் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், 2015ல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பஹ்ரைனைச் சேர்ந்த இரண்டு நபர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறி, ஜாபர் சுல்தான், சாதிக் தமர் என்ற இரு நபர்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.

பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணையின் இறுதியில், இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் கிழக்கு மாகாணத்தில், நீண்ட வாள்களால் இருவரின் தலைகளும் துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை மீறலுக்கு எதிரான சர்வதேச அமைப்பான ‘ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

‘குற்றவாளிகள் இருவரும் சித்ரவதை செய்யப்பட்டு, அவர்களிடம் வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெறப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதன் வாயிலாக விசாரணை நியாயமற்ற முறையில் நடந்துள்ளது தெரிகிறது’ என இந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.