Vanitha Vijaykumar: அதுக்கெல்லாம் பயப்படுற ஆள் இல்லை: வனிதா விஜயகுமார் அதிரடி.!

சோஷியல் மீடியா தற்போது பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ள வனிதா விஜயகுமார் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். தனது அதிரடியான நடவடிக்கையால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை தொடர்ந்து தற்போது சின்னத்திரை, திரைப்படங்கள் என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் வனிதா விஜயகுமார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் வனிதா விஜயகுமார். பிரார்த்தனை முடித்துவிட்டு வெளியில் வந்த அவரை சந்தித்து ரசிகர்கள் செல்பி எடுத்தனர். இதனையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார் வனிதா. தமிழில் தற்போது நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அடுத்தடுத்து இந்தப்படங்கள் திரைக்கு வர உள்ளது.

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அநீதி’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கிறேன். தெலுங்கில் நான் நடித்துள்ள ‘மல்லி பெல்லி’ படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பெருமாளை பார்க்க வந்துள்ளேன். தற்போது சினிமாவில் எனக்கு ரீ என்ட்ரி சிறப்பாக அமைந்துள்ளது.

Anitha Sampath: மோசமான கமெண்ட்.. கடுப்பான அனிதா சம்பத்: தரமான பதிலடி.!

நான் திரைத்துறையில் வந்த போது மிகவும் சிறிய பெண். 15 வயது தான் இருக்கும். இதனால் திரைத்துறை பற்றி பெரிதான அனுபவம் இல்லை. இப்போது சினிமாவை நன்கு புரிந்து கொண்டேன். சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு எளிதில்லை. திரைத்துறையில் எனது இரண்டாவது இன்னிங்சிற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என நானே எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Ravindar Mahalakshmi: தீயாய் பரவிய விவாகரத்து வதந்தி: ரவீந்தருக்கு வார்னிங் கொடுத்த மகாலட்சுமி.!

மேலும், திருப்பதி வந்தால் திருப்பம் ஏற்படும். இப்போ சிங்கிளா வந்து இருக்கீங்க. அடுத்து ஜோடியா வருவீங்களா என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு தற்போது சினிமாவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார் வனிதா. அதனை தொடர்ந்து இப்போ சினிமாவை லவ் பண்றீங்க. ரியலா எப்போ லவ் பண்ணுவீங்க என மறுபடியும் கேட்கப்பட்டதிற்கு, நடந்தா பார்த்துக்கலாம். அதுக்கு பயப்படுற ஆளோ. தயங்குற ஆளோ நான் இல்லை என அதிரடியாக தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.