புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனிதக் கழிவு கலக்கப்பட்டது. மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வந்தன. இதுகுறித்து டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் வேங்கை வயல் மற்றும் இறையூர் கிராமங்களில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார், 147 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். தொடர்ந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் டிஎன்ஏ சோதனையும் நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட பரிசோதனையில் இறையூர் முத்துக்காடு பகுதியை சேர்ந்த 11 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 3 பேர் மட்டுமே டிஎன்ஏ பரிசோதனைக்கு வந்தனர். வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்த 8 பேர் பரிசோதனைக்கு மறுத்துவிட்டனர்.
இரண்டாவது கட்ட டிஎன்ஏ பரிசோதனைக்கு இறையூர் முத்துக்காடு, வேங்கை வயல் ஆகிய கிராமங்களை சேர்ந்த 10 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த 10 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஏன்ஏ பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என
கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் துப்புதுலக்கி, கொலையாளிகளை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது மிகவும் சரியான செயல் என்று கூறியுள்ள அன்புமணி, ஊக்குவிப்பு தான் காவல்துறையினருக்கு உத்வேகம் அளிக்கும் என்று கூறி தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். மேலும் அதே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமுதாயத்தினரின் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடுங்குற்றம் நிகழ்ந்து இன்றுடன் 5 மாதங்கள் 6 நாட்களாகிவிட்டது என்று பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ்அதற்குக் காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க நடவடிக்கை எடுப்பாரா? என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.