தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அரபிக் கடல் மற்றும் வங்கக்கடலில் இரண்டு புயல் சின்னங்கள் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழை பொழிவை கொடுக்கும் தென்மேற்கு பருவ மழை இன்னும் ஒரிரு நாட்களில் தொடங்க உள்ளது. வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை மழை பொழிவை கொடுக்கும். அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கும் இந்த பருவமழை படிபடியாக முன்னேறி கேரளா, கர்நாடகா, வழியாக வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சென்றடையும்.
வரலாறு காணாத மழைஇந்நிலையில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இருப்பினும் மழை பொழிவு குறையாது என்றும் கூறியிருந்தது. இதனிடையே ஐரோப்பிய வானிலை மையம் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என கூறியிருந்தது. கேரளா மற்றும் கர்நாடக கடலோர மாவட்டங்களில் ஜூன் மாதத்தில் வரலாறு காணாத மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்திருந்தது.இரண்டு புயல்கள்
பருவ மழை முன்னறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஐரோப்பிய வானிலை மையம் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் முதல் வாரத்தில் அதாவது அடுத்த வாரத்தில் அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் இரண்டு புயல் சின்னங்கள் உருவாகும் என கூறியுள்ளது. இதனை வெதர் ஃபோர்கேஸ்டர் தளம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
வங்கக் கடல், அரபிக் கடல்
அதில் ஐரோப்பிய வானிலை மையம் தெரிவித்துள்ள தகவலின்படி இரண்டு சுழல்களும் நம்பமுடியாத அளவிற்கு செல்வதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் வங்காள விரிகுடாவில் உள்ளது அரபிக்கடலில் உள்ளதை விட வலிமையானதாக காணப்படுவதாக ஐரோப்பிய வானிலை மையமான ECMWF தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் அரேபிக் கடலில் இருப்பது பெரிதாகவும் வங்காள விரிகுடாவில் இருப்பது மைனராகவும் மாறும் என தனக்கு தோன்றுவதாகவும் வெதர் ஃபேர்கேஸ்டர் தளம் பதிவிட்டுள்ளது.
எந்த திசையில் செல்லும்?
இதேபோல் ECMWF மற்றும் GFS மையங்களின் முன்னறிவிப்புகளை அடிப்படையாக வைத்து
வெதர் அப்டேட் தளம் பதிவிட்டுள்ள டிவிட்டில்
ஜூன் 6 முதல் 9 ஆம் தேதிக்குள் அரபிக் கடலில் மிகவும் சக்தி வாய்ந்த புயல் உருவாகும் என ஐரோப்பிய வானிலை மையம் மற்றும் குளோபல் ஃபோர்கேஸ்ட் சிஸ்டம் எனும் ஜிஎஃப்எஸ் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் எந்த திசையில் செல்லும் என்பது குறித்து குழப்பமாக உள்ளதாகவும் ஆனால் இந்தியாவின் மேற்கு கடலோர பகுதி, மற்றும் ஓமன், பாகிஸ்தான் ஆகியவை அதன் இலக்காக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் 6 முதல் 9 ஆம் தேதிக்குள்ஒரே நேரத்தில்