சென்னை : நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர் விதவிதமான போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை திணறவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையால் பலரையும் கவர்ந்தவர் ரோபோ ஷங்கர்.
விஜயகாந்த் போல் அச்சு அசலாக உடல்மொழியையும், மிமிக்ரியையும் கொடுத்து அதகளமும் செய்தார்.
ரோபோ ஷங்கர் : சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கேற்ப திரைப்படங்களிலும் அறிமுகமானார் ரோபோ ஷங்கர். தனுஷுடன் மாரி, எழில் இயக்கத்தில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் : விஷ்ணு விஷால், சூரியுடன் இணைந்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் மன நலம் பாதிக்கப்பட்டவராக நடித்து பின்னிபெடல் எடுத்திருந்தார். இந்த படத்தில் ரோபோ சங்கர் ‘அன்னைக்கு காலையில 6 மணி’ என அவர் திரும்ப திரும்ப பேசியதை தொலைக்காட்சியில் எப்போது பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியாது. தொடர்ந்து பல படங்களில் நடித்த ரோபோ ஷங்கர்சின்னத்திரை போலவே வெள்ளித்திரையிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
பிரியங்கா ஷங்கர் : நடிகர் ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா சங்கர், ஒரு நடன கலைஞர் ஆவார். இருவரும் கடந்த 2002 ஆம் ஆண்டு காதலித்து திருமணம்செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். அவர், விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்திலும், விருமன் படத்தில் ஆதிதி ஷங்கரின் தோழியாகவும் நடித்திருந்தார்.
க்யூட் லுக் : இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா அவ்வப்போது, தனது கணவருடன் இணைந்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு வருகிறார். தற்போது, க்யூட்டான அழகில் விதவிதமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் வாவ் ஹீரோயினுக்கே டஃப் கொடுப்பீங்க போல என கிண்டல் அடித்து வருகின்றனர்.