பெங்களூரு:
ஆர்வமாக வந்தனர்
கர்நாடகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த கோடை விடுமுறை முடிவடைந்ததை அடுத்து அரசு பள்ளிகள் மாநிலம் முழுவதும் நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து பல்வேறு இடங்களில் குழந்தைகளை வரவேற்க பூக்கள், தோரணங்கள் வைக்கப்பட்டு இருந்தன.
பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா தேவனஹள்ளியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பள்ளிக்கு வந்த குழந்தைகளை சாக்லெட், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அந்த குழந்தைகளுக்கு சீருடையும் வழங்கினார். முதல் நாளில் குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். சில இடங்களில் பெற்றோர் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து பள்ளிகளில் விட்டு சென்றனர்.
தனியார் பள்ளிகள்
மேலும் கர்நாடகத்தில் பல்வேறு தனியார் பள்ளிகள் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படுகின்றன. மாணவர்களை வரவேற்க அந்த பள்ளிகள் தயாராகியுள்ளன. அந்த பள்ளிகள் ஏற்கனவே மாணவர்களுக்கு சீருடைகள், புத்தகங்கள் உள்ளிட்ட கல்விக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்கிவிட்டன.
முதல் நாளில் அரை நாள் மட்டும் வகுப்பு நடத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் முழு நேர வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு வர குழந்தைகள் ஆர்வமாக உள்ளனர்.