சேலம்: விளையாடச் சென்ற சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்! – முதல்வர் இரங்கல்!

சேலம், மேட்டூர் அருகே விருதாசம்பட்டி முனியப்பன் கோயில் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரின் மகன் பரணிதரன் கந்தன், ஊரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். சுபாஷின் உறவினர் நங்கவள்ளி கரட்டுப்பட்டி சேர்ந்த தங்கராசு, இவரின் மகன் கிரித்தீஷ். கோணூர் சமத்துவபுரம் அருகே தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் நேற்று பரணிதரன் கிரித்தீஷ் வழக்கம்போல் விளையாட சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. மாலை வரையிலும் அவர்கள் திரும்பாததை கண்டு அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர் அவர்களை அக்கம் பக்கத்தில் தேடினர்.

அப்போது விருதாசம்பட்டி முனியப்பன் கோயில் காட்டூர் ஏரியில் குளிக்க சென்றதாக, அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர் உடனே பதறி அடித்துக் கொண்டு ஏரிக்கரைக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு ஆடை மற்றும் செருப்புகள் மட்டும் கிடந்தது, இருவரையும் காணவில்லை. தொடர்ந்து ஏரிக்குள் இறங்கி பார்த்தபோது இருவரும் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இறந்துப்போன சிறுவர்கள்

இது குறித்து தகவலின் பெயரில் நங்கவள்ளி போலீஸார் விரைந்து வந்து, இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். இதில் நீச்சல் தெரியாத இருவரும் ஏரியில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது ஒருவர் மூழ்கிய போது மற்றொருவர் காப்பாற்ற முயன்றதால் இருவரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி பலியானது தெரிய வந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், தலா 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.