டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் கொடுத்த சிக்னல்… டார்கெட் டெல்லி… சீரியஸ் மோடில் ஸ்டாலின்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இரண்டு முக்கியமான விஷயங்கள் தான் தலைப்பு செய்திகளாக வலம் வந்தன. ஒன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம். தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு பல கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரியில் தமிழகத்தில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

​ஐடி ரெய்டு அஸ்திரம்இரண்டு, அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைக்கும் வகையில் அவர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை. ஸ்டாலின் அமைச்சரவையில் ஸ்வீட் பாக்ஸ் விஷயத்தில் டாப் அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி என்பதில் சந்தேகமில்லை. இதில் கட்சிக்குள்ளேயே சில புகைச்சல்கள் இருப்பதாக உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.கொங்கு மண்டல வியூகம்அதுமட்டுமின்றி கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்ததில் பாஜகவிற்கு ஏக சந்தோஷம். ஆனால் கோவை மாவட்டத்திற்கு செந்தில் பாலாஜி பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதும் அரசியல் களம் மாறத் தொடங்கியது. தனது தீவிர முன்னெடுப்பால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மூலம் திமுகவிற்கு பிரம்மாண்ட வெற்றியை தேடி தந்தார். இதனால் அதிமுகவின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.​
​​பாஜக போட்ட ஸ்கெட்ச்இதன்மூலம் செந்தில் பாலாஜியை பெரிதும் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது திமுக தலைமை. இது அதிமுகவை நம்பி அரசியல் கரைசேர கனவு கோட்டை கட்டிக் கொண்டிருக்கும் பாஜகவிற்கு பேரிடி. இந்த சூழலில் தான் பாஜக மாநிலத் தலைமைக்கு சொந்தமான மாவட்டத்தை சேர்ந்த மாஜி ஒருவர் சேகரித்து வழங்கிய சீக்ரெட்டான விஷயங்கள் மூலம் டெல்லிக்கு காய் நகர்த்தியுள்ளனர்.​போன் போட்ட ஸ்டாலின்அதன்பிறகு ரெய்டு அஸ்திரங்கள் ஏவப்பட தமிழக அரசியல் கொந்தளிக்க ஆரம்பித்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு தாக்குதலா? என திமுக சீனியர்கள் கோபத்தை காட்டினர். இந்த சமயத்தில் ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் ஸ்டாலின் இருந்துள்ளார். தகவலறிந்து உடனே அவர் போன் போட்டது உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ்க்கு தானாம்.​இனிமே தான் சம்பவம்தமிழகத்தில் என்னென்ன நடக்கின்றன என்று உச்சி முதல் வேர் வரை கேட்டறிந்து கொண்டார். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது உங்கள் கடமை. அதை தட்டாமல் செய்யுங்கள். மற்றபடி நடக்கும் சம்பவங்கள் தொடர்பாக லிஸ்ட் ஒன்றை தயார் செய்யுங்கள். எப்படி பதிலடி கொடுக்க வேண்டும்? எங்கே நெருக்கடி அளிக்க வேண்டும்? டெல்லியின் சமாளிப்பது எப்படி? என தமிழகத்திற்கு வந்து முடிவு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார்.
​​ரெடியான உளவுத்துறைஇந்நிலையில் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தமிழகம் புறப்பட்டுள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு ஸ்டாலின் தனது அதிரடியை தொடங்குவார் என திமுக உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.