தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையர் ஒருதலைபட்சமாக செயல்படுவதைக் கண்டித்து, தஞ்சாவூர் தி.மு.க தெற்கு மாவட்டப் பொருளாளர் அஸ்லம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரப்பரப்பு ஏற்பட்டது. இதனால் பரப்பரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சித் தலைவராக திமுகவை சேர்ந்த தாஹிரா அப்துல் கரீம் பதவியுள்ளார். முன்னாள் நகராட்சித் தலைவரும், தஞ்சாவூர் திமுக தெற்கு மாவட்ட பொருளாளரான அஸ்லம் உள்ளார். இவரது மனைவி ஆயிஷா 2-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.
கடந்த மே.19-ம் தேதி தனது வார்டுக்கு சாலை, குடிநீர், வடிகால் வசதிகளை செய்து தர வேண்டும் என நகராட்சித் ஆணையர் சித்ரசோனியாவிடம் அஸ்லம் மனு அளித்துள்ளார். ஆனால், இந்த மாதத்திற்கான நகர்மன்ற கூட்டத்தின் தீர்மானப் பொருளில், அவரது கோரிக்கையைப் பதிவிடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அஸ்லம், காலை 8.30 மணியில் இருந்து நகராட்சி அலுவலக வாயிலில், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தினர், அஸ்லமிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரிரு நாட்களில், வார்டில் உள்ள அடிப்படை பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என உறுதியளித்ததின் பேரில், மதியம் 3.30 மணிக்கு அஸ்லம் உண்ணாவிரதத்தைப் போராட்டத்தை கைவிட்டார்.