தந்தை புகைப்படத்திற்கு முன் ஆசீர்வாதம் வாங்கிய மகன்: மேக்னா ராஜின் உருக்கமான பதிவு.!

காதல் சொல்ல வந்தேன், உயர்ந்தி 420 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் மேக்னா ராஜ். இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். மேக்னா ராஜ் தற்போது தனது மகன் முதல்நாள் பள்ளிக்கு சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
நடிகை மேக்னா ராஜ் கன்னட திரையுலகின் பிரபல நடிகரான சிரஞ்சீவி சர்ஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவி கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் 7 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் உயிரிழந்த சமயத்தில் மேக்னா ராஜ் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். மேக்னா ராஜின் வளைகாப்பு நிகழ்வும் சிரஞ்சீவியின் புகைப்படம் முன்பாக தான் நடந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேக்னா ராஜுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. தன்னுடைய குழந்தைக்கு ராயன் ராஜ் என பெயர் வைத்தார் மேக்னா ராஜ். இதனையடுத்து தனது மகனின் புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார் மேக்னா ராஜ்.

‘மார்கழி திங்கள்’ படப்பிடிப்பில் திடீர் விபத்து.. உயிர் தப்பிய படக்குழு: சுசீந்திரன் பகீர் தகவல்.!

இந்நிலையில் தான் தற்போது தனது மகன் முதல்நாள் பள்ளிக்கு செல்லும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் மேக்னா ராஜ். அதில், நாம் பெற்றோர் ஆகிவிட்டால் குழந்தைகள் மட்டுமல்ல நாமும் மைல்களை கடக்கிறோம். இன்று அப்படிப்பட்ட ஒரு சிறப்பான நாள். ராயன் பள்ளிக்கு செல்லும் முதல் நாள்.

Leo: ‘லியோ’ படத்தில் இந்த பிரபல நடிகரின் தம்பியா.?: ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கும் லோகேஷ்.!

ராயன் பள்ளிக்கு செல்லும் முதல் நாள். நான் கடந்து வந்த உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கல்வி, அறிவு மற்றும் மிக முக்கிய வாழ்க்கை பாடங்களை நோக்கி எனது மகனின் முதல் படி. உங்கள் அனைவரின் ஆசிகளும் வாழ்த்துகளும் வேண்டும் என பதிவிட்டுள்ளார். மறைந்த தனது கணவர் முன்பாக தானும், ராயனும் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் மேக்னா ராஜ். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on InstagramA post shared by Meghana Raj Sarja (@megsraj)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.