பாங்காக்,
தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவருமான இந்தியாவின் பி.வி.சிந்து முதல் தடையை கடக்க முடியாமல் பணிந்தார்.
அவர் 8-21, 21-18, 18-21 என்ற செட் கணக்கில் கனடாவின் மிட்செலியிடம் தோல்வியை தழுவினார். இந்த ஆட்டம் 62 நிமிடங்கள் நீடித்தது. 12-வது முறையாக மிட்செலியிடம் மோதிய சிந்து அதில் சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். இந்த ஆண்டில் இன்னும் எந்த பட்டமும் வெல்லாத சிந்துவின் சோகம் தொடருகிறது.
Related Tags :