திருப்பதி தேவஸ்தானம் தேதி அறிவிப்பு… அடுத்த பிரம்மாண்டம் இங்க தானாம்… என்னென்ன சிறப்புகள்?

திருப்பதி கோயில் என்றாலே ஆந்திர மாநிலம் தான் அனைவருக்கும் நினைவில் தோன்றும். ஏழுமலைகளை தாண்டி சென்று திருமலையில் பக்தி பரவசத்துடன் வெங்கடாஜலபதியை தரிசித்து விட்டு மொட்டையும், லட்டுமாக திரும்பும் பக்தர்கள் ஏராளம். இந்த கோயிலை நிர்வகித்து வருவது TTD எனப்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானம். இதன் கட்டுப்பாட்டின் கீழ் நாட்டின் முக்கிய நகரங்களில் ஏழுமலையான் கோயில் கட்டப்பட்டு வருகிறது.

​திருப்பதி தேவஸ்தான கோயில்சில இடங்களில் ஏற்கனவே கோயில்கள் இருக்கின்றன. உதாரணமாக சென்னையை எடுத்துக் கொண்டால் தியாகராய நகரில் வெங்கட் நாராயண சாலையில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில் காணப்படுகிறது. சுமார் 50 ஆண்டுகளாக இந்த கோயில் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனை விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.​நேவி மும்பையில் பிரம்மாண்டம்இதேபோல் ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் திருப்பதி தேவஸ்தான கோயில்கள் இருக்கின்றன. புதிதாக பல நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் பெரிதும் கவனம் ஈர்த்துள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நேவி மும்பை நகரம். இங்குள்ள உல்வே பகுதியில் 10 ஏக்கர் நிலத்தை அம்மாநில அமைச்சரவை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த கோயில் திருப்பதியில் இருப்பது போன்ற வடிவமைப்புடன் கட்டப்படவுள்ளது.
பூமி பூஜைக்கு தேதி குறிச்சாச்சுஇதற்காக தேவஸ்தான பொறியாளர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 7ஆம் தேதி பூமி பூஜை நடைபெறவுள்ளது. இதையொட்டி மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு திருப்பதி தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி மற்றும் செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி அழைப்பு விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிராவிற்கு பெருமைமுன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் தான் திருப்பதி தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேவி மும்பையில் அமையவுள்ள திருப்பதி கோயிலால் மகாராஷ்டிர மக்களுக்கு பல்வேறு பயன்களும் ஏற்படும்.
​என்னென்ன நன்மைகள்?அதாவது, ஒரு சதுர மீட்டருக்கு ஒரு ரூபாய் வாடகை என்ற வகையில் ஒப்பந்தம் போடப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். கோயில் வருகையால் உள்ளூர் மக்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். புதிய சுற்றுலா தலம் உருவாகி வருவாயை ஈட்டித் தரும். மகாராஷ்டிராவில் இருந்து திருப்பதி சென்று தரிசிக்கும் பக்தர்கள் ஏராளம்.
வேற லெவலில் மாறும் உல்வேஇன்னும் பலரால் திருப்பதிக்கு பயணம் செய்ய முடியாத சூழல் காணப்படுகிறது. இவர்கள் தரிசனம் செய்ய ஏற்ற வகையில் நேவி மும்பையில் எழுப்பப்படவுள்ள திருப்பதி கோயில் விளங்கும். உல்வே பகுதியில் விரைவில் புதிய விமான நிலையம் ஒன்று வரவுள்ளது. இதன்மூலம் வெளியூர் மற்றும் வெளிமாநில பயணிகள் நேவி மும்பையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு எளிதில் வந்து சேர முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.