நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜூன் 1 முதல் இலவச வாகன நிறுத்த வசதி இல்லை

சென்னை: நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் வரும் ஜூன் 1-ம் தேதி இலவச வாகன நிறுத்தம் வசதி இல்லை என்றும், மெட்ரோ ரயில் பயண அட்டை அல்லது டிஜிட்டல் கட்டண முறைகள் மூலம் பார்க்கிங் கட்டணத்தை செலுத்தி வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளின் வாகன நிறுத்தும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சமீபத்தில் நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதலாக விரிவுபடுத்தப்பட்டுள்ள இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தும் இடத்தை திறந்துள்ளது. இந்த விரிவுபடுத்தப்பட்ட வாகன நிறுத்தும் இடத்தில் 1000 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 60 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்.

நங்கநல்லூர் சாலை மெட்ரோ வாகன நிறுத்தும் இடத்தில் 28.04.2023 முதல் 31.05.2023 வரை மெட்ரோ பயணிகளுக்காக இலவசமாக வாகன நிறுத்தம் வசதி இயக்கப்பட்டது.

இந்த நிலையில், மே மாதம் முடிவடைவதால், ஜூன் 1, 2023 முதல் சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டை அல்லது டிஜிட்டல் கட்டண முறைகள் மூலம் பார்க்கிங் கட்டணத்தை செலுத்தி, இனிமேல் பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.