சென்னை : புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார்.
பிச்சைக்காரன் 2 திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது.
இதில், காவ்யா விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகியிருந்தார்.
நடிகர் விஜய் ஆண்டனி : நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பிச்சைக்காரன்2 படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. பல நலத்திட்டங்களை செய்து வரும் நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் தற்பொழுது அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நெகிழ்ச்சியான செயல் : அதாவது புற்றுநோய்க்கு உதவி தேவைப்படுபவர்கள் தன்னை தாராளமாக அழைக்கலாம் என்று கூறியுள்ளார். புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் உதவிக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகர் விஜய் ஆண்டனி ஆந்திராவில் உள்ள ஜி.எஸ்.எல் மருத்துவமனையுடன் இணைந்து இந்த புதிய முயற்சியை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இணையத்தில் வெளியான இந்த தகவலை அடுத்து நெட்டிசன்ஸ் விஜய் ஆண்டனியை புகழ்ந்து வருகின்றனர்.
பிரியாணி விருந்து : முன்னதாக பிச்சைக்காரன் 2 படம் தெலுங்கில் சக்கைப்போடு போட்டதை அடுத்து, படத்தின் வெற்றி விழா விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஆண்டனி, 50 க்கு மேற்பட்ட பிச்சைக்காரர்களுக்கு பிரியாணியுடன் கூடிய விருந்து வைத்திருந்தார். அந்த வீடியோவில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, பிச்சைக்காரன் எமோஷனல் பயணம் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பாராட்டுகள் குவிந்தன.
பிச்சைக்காரன் 3 : பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாம் பாகம் விரைவில் உருவாகும் என விஜய் ஆண்டனி உறுதி செய்துள்ளார். முதல் இரண்டு பாகங்களுக்கு தொடர்பில்லாத முற்றிலும் புதிய கதைக்களத்தைக் கொண்டதாக மூன்றாம் பாகம் இருக்கும் என்று 2025ம் ஆண்டு உருவாகும் என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.