இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் கூறி, கடந்த ஒரு மாதமாக டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.
ஆட்டத்தை ஆரம்பிக்கும் தென்மேற்கு பருவமழை… அடுத்த வாரத்தில் 2 புயல்கள்!
இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டது. இதையடுத்து ஜந்தர் மந்தரில் இருந்து தடையை மீறி புதிய நாடாளுமன்றம் நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகள் பேரணியாக சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார் சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விரைவில் விரிவாக பேசலாம்… மேகதாது விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வருக்கு துரைமுருகன் கண்டனம்!
மேலும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தவும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து பேசிய பிரிஜ் பூஷண் சரண் சிங், ன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் கூட தொங்க தயார் என கூறியுள்ளார். மேலும் தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் அதை சமர்ப்பியுங்கள் என்றும் தண்டனை பெற தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பாலியல் பிரிஜ் பூஷணுக்கு எதிராக ஆதாரம் இல்லை என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 15 நாட்களில் பாலியல் புகார் தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக மல்யுத்த வீராங்கனைகள் தாங்கள் வென்ற ஒலிம்பிக் பதக்கங்களை வீசப் போவதாக மிரட்டல் விடுத்தனர்.
தென்மேற்கு பருவமழை எப்போது? இந்திய வானிலை மையம் பரபரப்பு தகவல்!
இதற்காக நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன், ஹரித்வாரில் உள்ள கங்கைக் கரையில் ஒன்றுகூடினர். ஆனால் விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை கைவிட்டனர். மேலும் மத்திய அரசுக்கு 5 நாட்கள் கெடு கொடுத்து திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.