வாரணாசி: பிரபல நடிகையின் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.. இது கொலையா? தற்கொலையா? என்ற பரபரப்பும் கிளம்பி உள்ளது.
போஜ்புரி மொழியில் பிரபல நடிகையாக இருந்தவர் அகன்ஷா துபே. .. இவர் உத்திரப்பிரதேச மாநிலம், மிர்சாபூரை சேர்ந்தவர்..
சின்ன வயது முதலே நடிப்பு மீது அதிக ஆர்வம்.. நடனம் என்றால் கொள்ளை பிரியம்.. இதற்காகவே, டிக் டாக்கை சரியாக பயன்படுத்தி, அதன்மூலம் மக்களிடம் குறுகிய காலத்தில் பிரபலமானார். ஏராளமான ரசிகர்களும் குவிந்தனர்… இன்ஸ்டாகிராமில் வீடியோக்களையும் பதிவு செய்யவும், புகழின் உச்சிக்கு சென்றடைந்தார்.
பிரபலம்: இதன்காரணமாக, 17 வயதிலேயே சினிமா வாய்ப்பு அகன்ஷாவை தேடி வந்தது.. போஜ்புரி மொழி படங்களில் புகழ்பெற்ற நடிகையானார்.. இந்நிலையில்தான், வாரணாசியில் ஷூட்டிங்குக்காக சென்றிருக்கிறார்.. அப்போது பிரபலமான ஓட்டல் ஒன்றிலும் தங்கியிருந்தார்..
ஓட்டல் ரூம்: கடந்த மார்ச் மாதம் 26ம்தேதி, முன்தினம் இரவு ஷூட்டிங் முடித்துவிட்டு, ரூமுக்கு சென்றிருக்கிறார்.. அப்போது, போஜ்புரி பாட்டுக்கு டான்ஸ் ஆடி அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார்.. ஓட்டல் ரூமில் கண்ணாடி முன்பு நின்றுகொண்டு, அந்த பாட்டுக்கு அவர் டான்ஸ் ஆடியிருக்கிறார்.. அந்த வீடியோ ட்ரெண்டாகி கொண்டிருக்கும்போதே தற்கொலை செய்து கொண்டார் அகன்ஷா.
மறுநாள் காலை 9 மணி வரை அகன்ஷா ரூமை விட்டு வெளியே வராமல் இருந்திருக்கிறார்.. அதனால், அவரது மேக்கன்மேன், அகன்ஷா ரூமுக்கு செல்வதற்காக கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.. அதனால், ஹோட்டல் ஊழியர்களின் துணையுடன் மாற்று சாவியை வைத்து கதவை திறந்து பார்த்துள்ளனர்.. அப்போதுதான் ஃபேனில் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார்.
லைவ் வீடியோ: அதுமட்டுமல்ல, இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், இன்ஸ்டாகிராம் லைவ் வந்துள்ளார்.. அப்போது, நேரலையிலேயே அகன்ஷா கதறி கதறி அழுதுள்ளார்… அவர் எதற்காக அழுதார் என்றும் தெரியவில்லை.. இந்த வீடியோவை பார்த்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இவரின் மரணம் போஜ்புரி திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த தற்கொலைக்கு பின்னணியில் காதல் விவகாரம் அடிபட்டது.. காரணம், இந்த வருடம் காதலர் தினத்தன்று தான், நடிகை அகன்ஷா துபே, சக நடிகர் சமர் சிங்குடன் காதலில் இருப்பதை அதிகாரப்பூர்வமாக சோஷியல் மீடியாவில் அறிவித்திருந்தார்..
அகன்ஷா தற்கொலை: எனவே, அகன்ஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் காதலர் சமர்சிங் மற்றும் அவரின் சகோதரர் சஞ்சய் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டப்பட்டது.. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.. ஆனால், இந்த வழக்கில் தங்களுக்கு தொடர்ந்து சந்தேகம் இருப்பதாகவும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அகன்ஷா குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்த தொடங்கினர். இப்படிப்பட்ட நிலையில்தான், அகன்ஷாவின் முரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அகன்ஷாவின் உள்ளாடையில் விந்தணு இருந்தது இப்போது கண்டறியப்பட்டுள்ளது.. அகன்ஷாவின் ஆடைகளிலும் விந்தணுக்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.. இதனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அமர்சிங், சஞ்சய் சிங், சந்தீப் சிங் , அருண்பாண்டே ஆகியோரின் மாதிரிகள் அகன்ஷாவின் ஆடைகளில் காணப்படும் விந்தணுக்களுடன் ஒத்துப்போகின்றனவா என்பது குறித்து அறிய 4 பேருக்கும் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட இருக்கின்றன.
யார் காரணம்: டிஎன்ஏ பரிசோதனை நடத்த தற்போது அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது என்று போலீஸ் டிஜிபி அமித் குமார் தெரிவித்துள்ளார்.. உள்ளாடையில் விந்தணு இருப்பது கண்டறியப்பட்டிருப்பது நடிகை அகன்ஷா தற்கொலை வழக்கில் புதுதிருப்பத்தை ஏற்படுத்தியிருப்பது பரபரப்பையும் கிளறிவிட்டுள்ளது. உண்மையிலேயே அன்று என்ன நடந்தது? எதற்காக லைவ் வந்தார்? எதற்காக கதறி அழுதார்? அனைத்துக்கும் விரைவில் விடை கிடைக்கும் என்கிறார்கள் அகன்ஷாவின் ரசிகர்கள்.