புதுடெல்லி: டெல்லியில் ஆளும் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, 2021-22 நிதியாண்டுக்கு புதிய மதுக்கொள்கையை கொண்டுவந்தது. இதில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்தனர். இதையடுத்து சிசோடியாதனது பதவியை ராஜினாமா செய்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது மனு கடந்த மார்ச் 31-ம்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார் சர்மா, சிசோடியாவின் ஜாமீன் மனுவை நேற்று நிராகரித்து தீர்ப்பு வழங்கினார்.