இந்தியாவிற்கு பெருமை சேர்க்கக் கூடிய முக்கியமான விளையாட்டுகளை ஒன்றாக திகழ்கிறது மல்யுத்தம். இந்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் தான் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவரும், சில பயிற்சியாளர்களும் சேர்ந்து கொண்டு மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக முன்வைக்கப்பட்டுள்ள புகார் தான் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மல்யுத்த வீரர்கள் போராட்டம்
தங்களுக்கு நீதி வேண்டும் என்றும், பிரிஜ் பூஷன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீதான தாக்குதல், வழக்குப்பதிவு உள்ளிட்டவற்றை உலக மல்யுத்த கூட்டமைப்பு உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை இல்லை
இவ்வளவு நடந்தும் பிரிஜ் பூஷன் மீது சிறு நடவடிக்கை கூட இல்லை. ஏன், மல்யுத்த வீரர், வீராங்கனைகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தக் கூட மத்திய அரசு தரப்பில் இருந்து யாரும் முன்வரவில்லை. இதில் பிரிஜ் பூஷன் பாஜக எம்.பி என்பது கவனிக்கத்தக்கது. இதன் காரணமாக தான் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
யார் இந்த பிரிஜ் பூஷன் சரண் சிங்?
கிரிமினல் வழக்குகள்
பாஜக தலைமை
மீண்டும் ஒருமுறை எம்.பி ஆகும் கனவில் இருக்கும் பிரிஜ் பூஷனுக்கு பேரிடியாய் வந்து இறங்கியுள்ளது மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டு. இன்னும் ஓராண்டில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. இந்த சூழலில் பிரிஜ் பூஷன் மீது பாஜக தலைமை எத்தகைய நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.