எல்இடி டிவியில் தள்ளுபடி: இந்நாட்களில் பெரும்பாலும் அனைவரது வீடுகளிலும் எல்இடி டிவி-கள் இருப்பதை காண்கிறோம். இவற்றில் ஆதிக தெளிவு இருப்பதோடு, இவை அதிக இடத்தையும் எடுத்துக்கொள்வதில்லை. பெரிய அளவிலான எல்இடி டிவி, அதாவது சுமார் 42 இன்ச் அளவுக்கு பெரிய எல்இடி டிவி-ஐ வாங்கினால், அதற்கு சுமார் ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். இருப்பினும், சில நேரங்களில் இந்த அளவு தொகையை நம்மால் செலவிட முடிவதில்லை.
இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் சிறிய அளவிலான எல்இடி டிவியை வாங்கிக்கொள்கிறார்கள். அல்லது பெரிய டிவி-க்கள் விலை குறைய சிறிது நேரம் காத்திருந்த பிறகு அதை வாங்குகிறார்கள். நீங்களும் அப்படி ஒரு தயக்கத்தில் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டை பாதிக்காமல், நல்ல எல்இடி டிவி-ஐ வாங்குவதற்கான வழியை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். இதில் உள்ள வழியில் டிவி-ஐ வாங்கினால், சில ஆயிரங்களில் வாங்கி விடலாம். அதற்கான வழிமுறையை பற்றி இங்கே காணலாம்.
குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் எல்இடி டிவி எது?
ஆன்லைன் விற்பனை தளமான பேஸ்புக்கில் ஆன்லைன் சந்தை உள்ளது. இதில் பல உள்நாட்டு அதாவது லோக்கல் வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இதில் இந்தியாவில் ஸ்மார்ட் எல்இடி டிவிகளை உற்பத்தி செய்யும் பல உள்ளூர் விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்களுடைய ஸ்மார்ட் எல்இடி டிவியைப் பற்றி நாம் பேசினால், இவற்றில் நமக்கு அனைத்து விதமான ரேஞ்சுகளிலும் டிவி-க்கள் கிடைக்கும். வைஃபை உடன் கூடிய ஸ்மார்ட் எல்இடி டிவி முதல் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் கூடிய எல்இடி டிவி வரை, அனைத்து வகையான வரம்பையும் வாடிக்கையாளர்கள் இங்கே பெறலாம்.
இங்கு அனைத்து எல்இடி டிவிகளும் சந்தை விலையை விட குறைந்த விலையில் கிடைக்கும். இது மட்டுமின்றி இவற்றில் உத்தரவாதம் மற்றும் வாரண்டியும் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையிலும், சந்தையில் கிடைக்கும் விலையுயர்ந்த எல்இடி டிவிகளைப் போலவே இந்த எல்இடி டிவி -களும் உள்ளன. ஆகையால் இந்த இடத்திலிருந்து டிவி -ஐ வாங்கினால் வாடிக்கையாளர்களுக்கு நன்மை மட்டுமே கிடைக்கும்.
42 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவியின் விலை எவ்வளவு
வாடிக்கையாளர்கள் 42 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவியை வாங்க விரும்பி, ஆனால், உங்கள் பட்ஜெட் அதிகமாக இல்லை என்றால், இந்த டிவி -ஐ வாங்குவது உங்களுக்கு சுலபமாக இருக்கும். இதை வாங்க நீங்கள் 5000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை செலுத்தினால் போதும். எல்இடி டிவி -யில் கிடைக்கும் அம்சங்களின்படி, அதன் விலை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். இந்த மார்க்கெட் பிளேசில் கிடைக்கும் இந்த எல்இடி டிவி-கள் பிராண்டட் தொலைக்காட்சிகள் போலவே தெரிகின்றன. இவற்றின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதால், இவற்றில் பழுது ஏற்பட்டால், அவற்றை சரி செய்வதற்கு ஆகும் செலவும் மிக குறைவாகவே இருக்கும்.
Facebook Marketplace
Facebook Marketplace நமது அருகில் வசிப்பவர்களிடமிருந்து அவர்கள் விற்பனை செய்ய விரும்பும் பொருட்களை வாங்கவும், நமது சொந்த பொருட்களை விற்பனை செய்யவும் அனுமதிக்கிறது. Facebook Messenger உடன் இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், விற்பனை தொடர்பான பேரங்களையும் நாம் இதில் செய்ய முடியும்.