திருவனந்தபுரம், கேரளாவின் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., சுரேஷ் பாபுவின் மனைவி நஸ்ரத்தை, போலீசார் நிதி மோசடி வழக்கில் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
கேரள லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வருபவர் சுரேஷ் பாபு. இவரது மனைவி நஸ்ரத், 36, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மலப்புரத்தைச் சேர்ந்த ஒருவரிடம், 4.85 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கித் தராததால், சந்தேகமடைந்த நபர், மலப்புரம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, நஸ்ரத் மீது வழக்கு பதிந்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் இது போன்று பலரிடம் முறைகேடு செய்தது தெரிய வந்தது. கடந்த 2022ல், லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., மனைவி எனக் கூறி, 50 லட்சம் ரூபாய் மற்றும் தங்கத்தை அபகரித்ததாகவும், நஸ்ரத் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், கொல்லம் ஆகிய இடங்களில், நஸ்ரத் மீது ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பாகவும் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement