வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டை நிரூபிக்கவோ, பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யவோ போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என டில்லி போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், மத்திய அமைச்சருமான பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கடந்த ஒரு மாதத்திற்கு மேல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் டில்லி போலீசாரின் உயர் அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: மல்யுத்த வீராங்கனைகள் அளித்த குற்றச்சாட்டின்படி, பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையாகவோ அல்லது இறுதி அறிக்கையாகவோ தாக்கல் செய்வோம்.
வீராங்கனைகளின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்கள் இல்லை. எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ள போக்சோ.,வின் பிரிவுகள் ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான சிறை தண்டனை கொண்டவை. எனவே குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய கோர முடியாது. அவர் சாட்சியங்களை அழிக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தூக்கிலிடுங்கள்
மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டியுள்ள மத்திய அமைச்சர் பிரிஜ் பூஷன் இது குறித்து கூறுகையில், ‘குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் என்னை தூக்கிலிடுங்கள்’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement