Hero Electric scooter price not hike – ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உயர்த்தப்படாது

hero electric optima cx

இந்தியாவின் முன்னணி ஹீரோ எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், FAME II மானியம் குறைக்கப்பட்ட போதிலும், பேட்டரி மின்சார ஸ்கூட்டர் வாங்குவதனை ஊக்குவிப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளோம் மற்றும் அதிகப்படியான செலவு பற்றிய தவறான எண்ணங்களை நீக்குவதற்காக இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FAME-II மானியம் ஜூன் 1 முதல் நடைமுறையில் உள்ள FAME-II மானியம் kWh ஒன்றுக்கு ரூ. 15,000க்கு பதிலாக இனி ஒரு kWh பேட்டரி திறனுக்கு ரூ.10,000 ஆக குறைக்கப்பட உள்ளது. நடைமுறையில் உள்ள 40 சதவீத மானியத்துடன் ஒப்பிடும்போது, E2W இன் முன்னாள் தொழிற்சாலை செலவில் (ரூ. 1.50 லட்சத்தை தாண்டக்கூடாது) இனி 15 சதவீதமாக மட்டுமே இருக்கும். எனவே, விலை உயர்ந்த எல்க்ட்ரிக் 2 வீலர் தயாரிப்பாளர்கள் விலை வரை உயரக்கூடும்.

Hero Electric

ஹீரோ எலக்ட்ரிக் அறிக்கையில் இ-ஸ்கூட்டர் வரிசையின் விலைகளை மாற்றாமல் இருப்பதன் மூலம், கூடுதல் செலவுகள் இல்லாமல் பேட்டரி மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மாறுவதற்கு அதிக எண்ணிக்கையிலான நுகர்வோரை ஊக்குவிக்கும் என இந்நிறுவனம் நம்புகிறது.

Phased Manufacturing Process திட்டத்தின் கீழ் FAME  மானியம் பெற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டதாக போலியான தகவலை வழங்கிய காரணத்துக்காக ஹீரோ எலக்ட்ரிக் மற்றும் ஓகினாவா ஆட்டோடெக் இரு மானியம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து 133 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.