இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல் ஹாசன். முதல் படத்திலேயே அசத்தும் இந்த சுட்டிப் பையன் பெரிய ஆளாக வருவான் என சினிமா ஜாம்பவான்களே பாராட்டினார்கள். அவர்கள் கூறியது மிகவும் சரி.
பிரம்மாண்டமாக நடைபெற்ற பிச்சைக்காரன்-2 வெற்றி விழா
வளர்ந்த பிறகு ஹீரோவான கமல் ஹாசன் நடிப்பில் புதுமையை புகுத்தி வருகிறார். இதற்கிடையே அரசியல் பக்கம் சென்ற அவரால் படங்களில் அதிக அளவில் நடிக்க முடியவில்லை.
4 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ரூ. 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட விக்ரம் படம் ரூ. 500 கோடி வசூல் செய்தது. கமல் ஹாசனின் கெரியரில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
Rajinikanth: ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் சம்பளம் எத்தனை கோடினு தெரியணுமா?
அந்த பட வெற்றிக்குப் பிறகே தன் சம்பளத்தை ரூ. 75 கோடியாக உயர்த்தினார் கமல் ஹாசன். இந்நிலையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன் நடிக்கும் ப்ராஜெக்ட் கே பான் இந்திய படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் கமல் ஹாசன் என தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு கமல் ஹாசன் தான் பொருத்தமாக இருப்பார், அவரை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என தயாரிப்பாளர் அஸ்வினி தத் நினைத்தாராம். இதையடுத்தே கமல் ஹாசனிடம் பேசினார்களாம்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கதையை கேட்ட கமலும், நான் நடிக்கிறேனே என கூறிவிட்டாராம். பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க 20 நாட்கள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறாராம் உலக நாயகன். 20 நாட்கள் நடிக்க கமல் ஹாசனுக்கு ரூ. 150 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்.
கமல் தற்போது வாங்குவதை விட இரண்டு மடங்கு அதிக சம்பளம். அவரின் கெரியரிலேயே முதல் முறையாக ரூ. 150 கோடி சம்பளம் வாங்குகிறார். பிரபாஸ் படம் மூலம் சம்பள விஷயத்தில் நண்பர் ரஜினிகாந்தை முந்திவிட்டார் கமல் ஹாசன்.
ரஜினிகாந்த் படம் ஒன்றுக்கு ரூ. 120 கோடி வாங்குகிறார் என அண்மையில் தான் தகவல் வெளியானது. கமல் ஹாசனை ரூ. 150 கோடி கொடுத்து புக் செய்திருக்கிறார்கள் என்றால் அந்த வில்லன் கதாபாத்திரம் மரணமாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது. பாலிவுட் ஜாம்பவானான அமிதாப் பச்சனும் அந்த படத்தில் நடிக்கிறார்.
Kamal Haasan: கடைசி முறையாக தம்பி உதயநிதி ஸ்டாலினுக்காக களத்தில் இறங்கும் கமல்
கமல் ஹாசன் ஒரு புதுப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இது, இதை தான் எதிர்பார்த்தோம் ஆண்வடரே. ஆனால் ஸ்டேட் விட்டு ஸ்டேட் போய் வில்லனாக நடிப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எது எப்படியோ உங்களை பெரிய திரையில் பார்க்க மேலும் ஒரு வாய்ப்பு. எங்களுக்கு அது போதும் என்கிறார்கள்.
கமல் தற்போது அதிக படங்களை தயாரிக்கிறார். நடிகர் கமலை பார்க்க விரும்பும் ரசிகர்கள் தயாரிப்பாளர் கமல் ஓவர் ஆக்டிவாகி வருவதை பார்த்து கவலை அடைந்தார்கள். இந்நிலையில் பிரபாஸுக்கு வில்லனாகிறார் கமல் என்றதும் குஷியாகிவிட்டார்கள்.