இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Maamannan audio launch: உதயநிதி ஸ்டாலினுக்காக கமல் ஹாசன் இப்படியொரு விஷயத்தை செய்வதில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே.
மாமன்னன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வைகைபுயல் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் மாமன்னன். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் மாமன்னன் பட போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் மாமன்னன் படத்திற்கும் கமல் ஹாசனுக்குமான தொடர்பு பற்றி தெரிய வந்திருக்கிறது.விஜய் ஆண்டனிபிரம்மாண்டமாக நடைபெற்ற பிச்சைக்காரன்-2 வெற்றி விழாகமல்மாமன்னன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஜூன் மாதம் 1ம் தேதி நடக்கிறது. சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கும் அந்த விழாவில் கலந்து கொண்டு பாடல்களையும், ட்ரெய்லரையும் வெளியிடவிருக்கிறார் உலக நாயகன் கமல் ஹாசன். தம்பி உதயநிதிக்காக இதை செய்கிறார் கமல்.
வடிவேலுமாமன்னன் படத்திற்காக ரஹ்மான் இசையில் பாடியிருக்கிறார் வடிவேலு. அவர் இசைப்புயலின் இசையில் பாடியிருப்பது இதுவே முதல் முறையாகும். இசை வெளியீட்டு விழா அன்று மாமன்னனின் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் ரசிகர்களுக்கு இந்த படம் ரொம்ப ஸ்பெஷலாகும். காரணம், மாமன்னனுடன் நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.
ரஜினிமாமன்னன் பட இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல் ஹாசனும் சேர்ந்து கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை கமல் ஹாசன் வெளியிடுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி வருவாரா இல்லையா என்பது தெரியவில்லை. தம்பியின் கடைசி பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கிறார் கமல் ஹாசன்.
Rajinikanth: ரஜினி ரிடையர் ஆகிறாரா?: உண்மையை சொன்ன அண்ணன் சத்ய நாராயண ராவ்
எதிர்பார்ப்புமாமன்னன் படம் உதயநிதி ஸ்டாலினின் கெரியரில் மிகவும் முக்கியமான படமாக அமையும் என நம்பப்படுகிறது. இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் உதயநிதி. கடைசி படம், வித்தியாசமான கதாபாத்திரம், மாரி செல்வராஜ் இயக்கம் என்பதால் மாமன்னன் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
அமைச்சர்படங்களில் நடித்துக் கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் அரசியல் பக்கம் சென்று முதலில் எம்.எல்.ஏ. ஆனார். அதன் பிறகு அமைச்சராகிவிட்டார். மக்கள் சேவை செய்யவே நேரம் போதவில்லை என்பதால் நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் உதயநிதி. மேலும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்றும் தெளிவாக கூறிவிட்டார். முழு நேரமும் மக்கள் சேவை செய்யப் போகிறார் உதய்ணா.
Ajith: எனக்கு அவ்ளோலாம் தேவையில்ல: அஜித்தை இம்பிரஸ் செய்த விடாமுயற்சி இயக்குநர் மகிழ்திருமேனி
7