இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து தற்போது அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மண்டேலா என்ற படத்தை யோகி பாபுவை நாயகனாக வைத்து இயக்கி தேசிய விருதை வென்றார் அஸ்வின். அதன் மூலம் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படும் இயக்குனரான அஸ்வின் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே இயக்குனர் அஸ்வினிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் பரவின. இதனால் படப்பிடிப்பும் நின்றதாக கூட வதந்திகள் பரவின. ஆனால் இதெல்லாம் வெறும் வதந்திதான் என்று சிவகார்த்திகேயன் கூறிய பிறகு இந்த பேச்சு அடங்கியது.
Dhanush: D50 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கப்போவது இவங்க தானா? மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி ..!
இதைத்தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு முடிவுக்கு வந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி மாவீரன் படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் மாதம் ரஜினியின் ஜெயிலர் வெளியாவதாக அறிவிப்பு வந்ததால் மாவீரன் படத்தை ஜூலை மாதத்தில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. இதன் அறிவிப்பும் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் தற்போது மாவீரன் படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. சில நாட்களுக்கு முன்பு தான் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்திற்காக டப்பிங் பணிகளை துவங்கினார். அதன் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வரும் மிஸ்கின் மாவீரன் படத்தை பற்றி பேசியுள்ளர். அவர் கூறியதாவது, மாவீரன் படத்தில் நான் பயங்கரமான வில்லனாக நடித்துள்ளேன். வேஷ்டி சட்டையில் வந்து மிரட்டும் வில்லனாக நடித்துள்ளேன். மேலும் சிவகார்த்திகேயனுக்கும் எனக்கும் இடையேயான காட்சிகள் மிகவும் பரபரப்பாக இருக்கும்.
குறிப்பாக அப்படத்தின் இயக்குனரான அஸ்வினின் வேலை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தான் நினைத்ததை திரையில் கொண்டுவர அவர் பாடுபட்டு உழைக்கிறார் என பேசியுள்ளர் மிஸ்கின். இவர் இவ்வாறு பேசியதை அடுத்து படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கின்றார். அஸ்வினின் முதல் படத்தை போலவே மாவீரன் படமும் எதார்த்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் ஆக்ஷனை தவிர்த்து இப்படத்தில் எமோஷனல் காட்சிகள் பெரிதும் பேசப்படும் என தெரிகின்றது. எனவே மாவீரன் படத்தில் நாம் வித்யாசமான சிவகார்த்திகேயனை பார்ப்போம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.